Top posting users this month
No user |
Similar topics
எல்லைக்கிராமங்களை காப்பாற்ற வேண்டிய கடமை தமிழர்களாகிய எம் கையிலேயே உள்ளது: பா.உ. பா.அரியநேத்திரன்
Page 1 of 1

கிழக்கு மாகாணத்திலே எல்லைக்கிராமங்கள் பல பெரும்பான்மை இனத்தவரால் நன்கு திட்டமிட்ட முறையில் நில அபகரிப்புக்கள் நடைபெற்றதன் காரணமாக அதனை தடுத்து நிறுத்துவதற்காக எமது கட்சி நீதிமன்றம் செல்லவேண்டிய நிலைக்கு தமிழர் வரலாறு இருந்திருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
இந்து கலாசார திணைக்களத்தினால் பட்டிப்பளை பிரதேசசெயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினத்தின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் மே.மதனரூபன் தலமையில் நேற்று புண்ணிய கிராம நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி வி.சிவப்பிரியா, கலாசார திணைக்கள உத்தியோஸ்த்தர் எஸ்.குணராசா மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
கல்வியை கற்கும் மாணவ சமுதாயத்திற்கு வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை ஆசிரியர்கள் மத்தியில் இருக்கின்றது. வரலாறு என்றால் உலக வரலாறு, இலங்கை வரலாறு அதற்கும் மேலாக எமது தமிழ் இனத்தின் வரலாறுகளைக் கற்றுக்கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு நாம் அனைவரிடத்திலும் உள்ளது.
மாணவர்களுக்கு ஆரம்பம் முதல் அறம் சார்ந்த கல்வியினை ஊட்டுவதன் மூலம் ஆன்மீகம் தானாக வளரும் அதனை வளர்த்துக்கொண்ட மாணவர்கள் சமுதாயத்திற்கு ஏற்றாற்போல் ஒழுக்கசீலர்களாக உருவாகுவார்கள். அவ்வாறானவர்கள் நல்ல பிரஜைகளாக பரிணமிப்பார்கள்.
இந்து கலாசார திணைக்களத்தினால் முன்னெடுக்கப்ட்டிருக்கும் இத்திட்டத்தினை தமிழர்கள் வாழும் எல்லைக்கிராமங்களில் நடத்தினால் அங்குள்ள மக்களையும் விளிப்படையச் செய்ய முடியும்.
எல்லைக்கிராமங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நில அபகரிப்புக்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததன் காரணமாக எமது கட்சி நீதிமன்றம் சென்று வழக்குத்தாக்கல் செய்து அதனை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம். அதற்கு அப்பால் எல்லைக்கிராமங்களில் தமிழ்மக்கள் வாழ்வதற்கான மனோநிலையை கொண்டிருத்தல் வேண்டும் அவ்வாறு அங்கு சென்று வாழும்போதுதான் எமது எல்லைக்கிராமங்களை காப்பாற்றமுடியும்.
இன்றைய காலகட்டத்தில் தமிழ்மக்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் காரணம் எமது கலை, கலாச்சாரம், பண்பாடுகளை சிதைப்பதற்கும் பல்வேறுபட்ட சதித்திட்டங்கள் திரைமறைவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அதனை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் நாம் அவதானமாக இருத்தல் வேண்டும்.
இன்று புதிய ஆட்சியொன்று மாறிவிட்டதுதானே என்று எவரும் கவலையீனமாக இருந்துவிடுவோமாக இருந்தால் எமது நிலங்கள் மேலும் அபகரிக்கப்பட்டு விடும் மாறாக நாம் அந்த இடத்தினை பாதுகாக்கக்கூடியவர்களாக நாம் ஒவ்வொருவரும் மாறவேண்டும். எதிர்காலத்தில் எமது கலை, கலாசாரங்கள், பண்பாடுகள் அனைத்தையும் பாதுகாக்கக்கூடிய விதத்தில் த.தே.கூட்டமைப்பினை கட்டியெழுப்பவேண்டிய தேவை தமிழ்மக்களாகிய நம் ஒவ்வொருவரிடத்திலும் தங்கியுள்ளது எனக்கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குமார் குணரத்னவை நாட்டை விட்டு துரத்த வேண்டிய அவசியம் ஜே.வி.பிக்கு மட்டுமே உள்ளது: அஜித் குமார
» அறிய வேண்டிய நீதிகளும், தவிர்க்க வேண்டிய தீய குணங்களும்
» கடமை அறியோம் தொழிலறியோம்
» அறிய வேண்டிய நீதிகளும், தவிர்க்க வேண்டிய தீய குணங்களும்
» கடமை அறியோம் தொழிலறியோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum