Top posting users this month
No user |
Similar topics
மோடியின் வருகை இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்: கனேடிய தமிழர் பேரவை
Page 1 of 1

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் இந்திய பிரதமரின் வருகை பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வையும், அமைதியையும், உண்டாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமரை வரவேற்று கனேடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 வருடங்களின் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதோடு முதல் தடவையாக இந்திய பிரதமரொருவர் வடமாகாணத்திற்கு செல்வதும் தமிழர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் உறுதி பூண்டுள்ளதை அப்பேரவை வரவேற்றுள்ளதாகவும்,
2009ம் ஆண்டின் பின்னர் மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகள், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அகற்றுதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி பல்வேறு அமைப்புக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் தமிழர்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்படும் என கனேடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டை இயல்புபு நிலைக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அரச பதவிகளிலிருந்து இராணுவத்தை நீக்கியமை, வட, கிழக்கு மாகாணங்களுக்கான விஜயம், ஜெயக்குமாரி உள்ளிட்ட எண்மரின் விடுதலை, உள்ளிட்டவை இவற்றிற்கு சிறந்த உதாரணங்களாகும்.
அது மாத்திரமல்லாது யுத்த குற்ற விசாரணைகளையும் பக்கசார்பின்றி மேற்கொள்ளும் என கனேடிய தமிழர் பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளளது.
மேலும் இலங்கையின் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டணி அரசாங்கத்தினால் இலங்கையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்று கொடுப்பதற்கான சிறந்த வாய்ப்பு இந்திய பிரதமரின் வருகையாகும்.
இதனை தவறவிடாது தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட இலங்கை அசாங்கத்திற்கு இந்திய பிரதமர் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என குறித்த பேரவை கேட்டு கொண்டுள்ளது.
அத்துடன் தமிழகத்திலுள்ள முகாம்களில் தஞ்சம் கொண்டுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அனுப்புதல், மற்றும் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்று கொடுப்பதற்கும் இந்திய பிரதமர் முன்னுரிமை வழங்க வேண்டும் என கனேடிய தமிழர் பேரவை கேட்டு கொண்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கூட்டமைப்புடன் புதிய ஜனாதிபதி இணைந்து செயற்பட வேண்டும்: இந்திரகுமார்- கனேடிய தமிழர் பேரவை, சைவ மகாசபை வாழ்த்து
» பிரதமர் மோடியின் வருகை கிருஷ்ண தூதாகுமா?
» உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம்
» பிரதமர் மோடியின் வருகை கிருஷ்ண தூதாகுமா?
» உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum