Top posting users this month
No user |
இலங்கையில் மயக்கத்தை ஏற்படுத்தும் போதைப் பொருள் பாவனை: சுங்கத் திணைக்களம்
Page 1 of 1

போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படவிருப்பதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஜகத் டி வீரவர்தன தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட டிராக்டர் வண்டிகளை பொலிசார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கைப்பற்றி இருந்தனர்.
நேற்று இத்திணைக்களத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
குறித்த டிராக்டர்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
அவர்களுக்கு நாம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம். இந்தப் போதைப் பொருள் மிக சூட்சுமமான முறையிலேயே கொண்டு வரப்பட்டுள்ளதெனவும் பல சிக்கல்களுக்கு மத்தியில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எமது திணைக்கள அதிகாரிகள் மிகவும் அவதானத்துடன் இருப்பதோடு அது குறித்து விசேட பயிற்சிகளும் சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் தற்பொழுது மயக்கம் ஏற்படுத்தும் போதைப்பொருள் வகை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போதைப்பொருள் பாவனை இலங்கையில் குறைந்தளவே பயன்பாட்டில் உள்ளது.
எனினும் இலங்கையில் போதைப்பொருள் பாவனையை முற்றிலும் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளில் தாம் முழுமூச்சுடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum