Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
Page 1 of 1

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நிறைவடைவதால் வழக்கின் தீர்ப்பு திகதி இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதம் கடந்த 6ம் திகதி, நிறைவடைந்த நிலையில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் நேற்று முன்தினம் நிறுவனங்கள் மனுவுக்கு எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர்களின் சார்பில் 171 பக்கங்கள் கொண்ட எழுத்துபூர்வமான வாதமும் மற்றும் தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள், வரவு-செலவுகள், கட்டுமான பணிகளுக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்து 65 பக்க ஆவணங்கள் அடங்கிய வாதமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார் வாதிடுகையில், ஜெயலலிதாவிடம் இருந்து மற்ற 3 பேருக்கும் பண பரிமாற்றம் நடைபெற்று உள்ளதாக அரசு தரப்பு சொல்கிறது.
இதற்கான ஆவணங்கள் எதையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. வாய்மொழியாக மட்டுமே அவர்கள் குற்றம் சொல்வதை ஏற்கக்கூடாது.
ஜெயலலிதா வீட்டில் தங்கி இருந்ததால் அவர்கள் கூட்டுச்சதியில் ஈடுபட்டனர் என்று சொல்வதும் தவறானது. சுதாகரன் திருமண செலவை ஜெயலலிதா செய்யவில்லை, அவர் வெறும் ரூ.29 லட்சம் மட்டுமே செலவு செய்தார்.
மற்ற செலவுகளை பெண் வீட்டார் மற்றும் அ.தி.மு.க. கட்சி தொண்டர்கள் செய்தனர்.
ஆனால் லஞ்ச ஒழிப்பு பொலிசார் அந்த செலவு முழுவதையும் ஜெயலலிதா கணக்கில் சேர்த்துவிட்டனர். இதை தாங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஜெயலலிதா வீட்டில் சசிகலா தங்கி இருந்துள்ளார். அங்கிருந்தபடி தொழில் செய்ததாக நீங்கள் சொல்கிறீர்கள்.
அப்படி இருக்கும்போது அவர்கள் கூட்டுச்சதி செய்யவில்லை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் மணிசங்கர், ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதற்கு முன்பு இருந்தே சசிகலா அவரது வீட்டில் தங்கி இருந்தார்.
அவர்கள் ஒரே வீட்டில் தங்கி இருந்தனர் என்பதற்காக அவர்கள் கூட்டுச்சதியில் ஈடுபட்டனர் என்பது சொல்வது தவறானது என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங், அவர்கள் கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும், ஜெயலலிதாவிடம் இருந்து மற்ற மூவருக்கு பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன என்று கூறினார்.
மேலும், இன்றுடன் மேல்முறையீட்டு மனு மீதான ஒட்டுமொத்த விசாரணையும் முடிவடைவதால் தீர்ப்பு தேதியை நீதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் 41-வது நாளான இன்று காலை சுப்ரமணியசாமி தனது 14 பக்க எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை தாக்கல் செய்தார்.
தனது வாதத்தில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும் என்று சுப்ரமணியசாமி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து விசாரணை முடிந்து விட்டதாக கூறிய நீதிபதி குமாரசாமி, தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு [ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 05:53.58 AM ] [Photo] ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நிறைவடைவதால் வழக்கின் தீர்ப்பு திகதி இன்று
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ஜெயலலிதாவின் 22 ஆண்டு கால வழக்கு முடிவுக்கு வந்தது: நீதிமன்றம் தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum