Top posting users this month
No user |
Similar topics
இந்தியா வந்தடைந்த உலகின் முதல் சோலார் விமானம்
Page 1 of 1

உலகின் முதல் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் 'Solar Impulse 2’ விமானம் அபுதாபியிலிருந்து பயணத்தை தொடங்கி நேற்று குஜராத்தின் அகமதாபாத் வந்தடைந்துள்ளது.
விமான எரிபொருள் இல்லாமல் முழுதும் சூரிய ஒளி மூலமே இயங்கும் 'Solar Impulse 2’ என்ற விமானம் மூன்று கண்டங்களையும், இரண்டு கடற்பரப்புகளையும் சேர்த்து சுமார் 22,000 மைல் தூரத்தை 5 மாத பயணத்தில் கடக்கவுள்ளது.
நேற்று முன்தினம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய இந்த விமானம், நேற்று நள்ளிரவு குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை அடைந்துள்ளது.
விமானத்தை இயக்கிய Bertrand Piccard-க்கு மோனாகோவில் உள்ள விமானத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ட்விட்டர் மூலம் வாழ்த்து சொல்லப்பட்டது.
அவரையும் அவரது சகவிமானிகளையும் விமான நிலைய அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
மேலும், இந்த விமானத்தின் வருகையால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் 4 நாட்கள் இந்த விமானம் அகமதாபாத்தில் இருக்கும் என்று சுவிஸ் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியா வந்தடைந்த அவுஸ்திரேலிய பெண் பொறியாளரின் சடலம்: இன்று இறுதி சடங்கு
» உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கியது
» உலகின் முதல் திருக்குறள் தலைமைத் தூதர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum