Top posting users this month
No user |
Similar topics
'கோத்தா பேஸ்' என்ற பெயரில் முகாம் இருக்கவில்லை: முன்னாள் கடற்படைத் தளபதி
Page 1 of 1

கோத்தா பேஸ்' என்ற பெயரில் முகாம்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் இது கடற்படையினருக்கு சேறுபூசுவதற்காக எவரோ செய்து வரும் பொய் பிரச்சாரம் என முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கடற்படை முகாமில் கோத்தா பேஸ் என்ற பெயரில் முகாம் ஒன்று இருந்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து முன்னாள் கடற்படைத் தளபதியிடம் சிங்கள ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
கோத்தா என்ற பெயரில் முகாம் எதுவும் இருக்கவில்லை. நான் அறிந்த வரையில் அப்படி எதுவும் இல்லை.
இது கடற்படையினருக்கு சேறுபூசுவதற்காக எவரோ மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரம். இதன் காரணமாக உண்மையை வெளியிட தீர்மானித்தேன்.
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் கடற்படையினர் முக்கிய பங்காற்றினர். ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரம் சென்று புலிகளின் கப்பலைகளை கடற்படையினர் அழித்தனர்.
இந்த பணியானது எமது சக்திக்கும் அப்பால் சென்று செய்த பணியாகும். அப்படியான முக்கிய சேவையை செய்த கடற்படையினர் மீது சேறுபூசுவதை பார்த்து கொண்டிருக்க முடியாது. இதனால், கோட்டா பேஸ் முகாம் பற்றிய செய்தியை தெளிவுப்படுத்த முடிவு செய்தேன் என்றார்.
இதேவேளை, திருகோணமலை கடற்படை முகாமில் கோட்டா பேஸ் என்ற முகாம் இருந்ததாகவும் அதில் 700 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தனக்கு தகவல் வழங்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» BJP என்ற பெயரில் பொதுபல சேனா தேர்தலுக்கு தயாராகிறது!
» முன்னாள் விமானப்படை தளபதி ரொசான் குணதிலகவிடம் விசாரணை
» முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum