Top posting users this month
No user |
Similar topics
பெண்மை இன்றி அமையாது உலகு: ஜெயலலிதாவின் மகளிர் தின வாழ்த்து
Page 1 of 1

சர்வதேச மகளிர் தினம் நாளை கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில், ‘பெண்மை வாழ்க!’ என்று நன்றிப் பெருக்குடன் உலகம் மகளிரை வாழ்த்தி வணங்கும் சிறப்புக்குரிய நாள் மார்ச் திங்கள் 8ஆம் நாள்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக உலகப் பெண்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை என்று வாழ்வில் அனைத்து களங்களிலும் பெற்று வரும் மகத்தான வெற்றிகளை நினைவுபடுத்தவும், பெண்கள் வெற்றி கொள்ள வேண்டிய களங்களும், சவால்களும் இன்னும் ஏராளமாகக் காத்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும் இந்நாள் மகளிர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
பெண் இனம் அடைந்திருக்கும் வெற்றிகள் அனைத்திற்கும் என் பாராட்டுக்கள்; அடையப்போகும் வெற்றிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணை.
பெண் எப்பொழுதும் வெற்றியின் வடிவம்; பெண் தியாகத்தின் ஊற்று; பெண்மை இன்றி அமையாது உலகு.
பெண்மை வாழ்க! பெண் இனம் வாழ்க! என்று இந்த உலக மகளிர் தின நன்னாளில் இல்லத்தரசிகளாகவும்; பல்வேறு துறைகளில் பணிபுரியும் உழைக்கும் மகளிராகவும்; எதிர்காலத்தில் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தும் கனவுகளுடன் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாணவிகளாகவும்; இயன்றது அனைத்தையும் தம் குடும்பங்களுக்குத் தந்து, குடும்பத்தில் உள்ளோரின் உயர்விலும், மகிழ்ச்சியிலும் மன நிறைவு கொண்டு வாழும் தாய்மார்களாகவும் விளங்குகின்ற என் அன்புச் சகோதரிகளுக்கு எனது உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த காலங்களிலும்; அறிவியலும், நாகரீகமும் பெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கும் இந்தக் காலத்திலும் ஒரு பெண் சமூகத்தில் சாதனையாளராக மட்டுமல்ல, சாமானியராக வாழ்வது கூட பெரும் சவாலாகத்தான் உள்ளது.
இறைவன் ஆணையும், பெண்ணையும் அறிவிலும், ஆற்றலிலும் சமமாகத் தான் படைத்துள்ளார்.
வாய்ப்புகள் வெவ்வேறு வடிவங்களைப் பெறுவதாலும், பல நேரங்களில் பெண்ணுக்கு அவை மறுக்கப்படுவதாலும் சமூகத்தில் பெண்கள் தங்களுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்திக் கொள்ள இயலாமல் போயிற்று.
ஆனால், பெண் இனம் சம வாய்ப்பும், சம மரியாதையும் பெற்றால் மட்டுமே ஒரு சமூகம் முழுமை பெற்ற சமூகமாகவும், வளர்ச்சி அடைந்த சமூகமாகவும் மாறும் என்பதை உலகம் உணரத் தொடங்கிவிட்டது.
மேலும், பெற்றிருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தங்கள் முழு ஆற்றலோடும், உற்சாகத்தோடும் உழைத்து, இன்னும் எண்ணற்ற வெற்றிகளை பெண் இனம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீரின்றி அமையாது உலகு
» பெண்மை வாழ்க
» வெள்ளத்தால் உருக்குலைந்து போன கடலூர்! உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்
» பெண்மை வாழ்க
» வெள்ளத்தால் உருக்குலைந்து போன கடலூர்! உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum