Top posting users this month
No user |
Similar topics
பாகிஸ்தானியருக்கு மறுபிறப்பை ஹோலி பரிசாக வழங்கிய இந்திய மாணவர்கள்!
Page 1 of 1

பாகிஸ்தானை சேர்ந்த நோயாளி ஒருவரின் அறுவை சிகிச்சைக்கு, இந்திய மாணவர்கள் 12 பேர் ரத்த தானம் செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும் அமன் லால் மக்கிஜா என்பவரது கல்லீரல் திடீரென பாதிக்கப்பட்டதால் அவர் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
கல்லீரல் அறுவை மாற்று சிகிச்சைக்காக மக்கிஜாவுக்கு அவரது மைத்துனரான தில்ஷாத் அலி தனது கல்லீரலை அளிக்க முன்வந்தார்.
இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துமனைக்கு மக்கிஜாவும், தில்ஷாத் அலியும் வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில், மக்கிஜாவின் அறுவை சிகிச்சைக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்பட்டதை அடுத்து, தில்ஷாத் அலி மருத்துவமனைக்கு அருகே உள்ள இடங்களில் உடனடியாக ரத்தம் தேவை என்ற நோட்டீசை ஒட்டியுள்ளார்.
இதனை பார்த்த சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வந்த மாணவர்களில் 12 பேர் தங்களது ரத்தத்தை தானமாக தர முன்வந்தனர்.
சிகிச்சைக்கு தேவையான ரத்தத்தை சரியான நேரத்தில் மாணவர்கள் தானம் செய்ததால், கடந்த பிப்ரவரி 27ம் திகதி மக்கிஜாவுக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
தற்போது மக்கிஜாவும், அலியும் நல்ல உடல் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் மருந்தகம் ஒன்றை நடத்திவரும் மக்கிஜா கூறுகையில், எனக்கு மறுபிறப்பு எடுத்ததை ஹோலி பரிசாக எண்ணுகிறேன். நான் வசிக்கும் பகுதியில் 400 இந்து குடும்பங்கள் வசிக்கின்றனர், எங்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித முரண்பாடும் தோன்றியதில்லை.
மேலும், இங்கு வசிக்கும் மக்களும், ரத்த தானம் செய்த மாணவர்களும் உதவும் மனப்பான்மையுடன் பெருந்தன்மையாக நடந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்திய முறைப்படி திருமணம் புரிந்த சீன காதல் ஜோடி! வண்ணமயமாக கொண்டாடப்பட்ட ஹோலி
» தனது சொத்தில் பெரும் பகுதியை உலக நன்மைக்கு வழங்கிய இந்திய-அமெரிக்க தொழிலதிபர்
» பதவியேற்கும் முன்பே மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை பரிசாக அளித்த ஜெயலலிதா: குஷ்பூ அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum