Top posting users this month
No user |
Similar topics
பெற்ற மகளுக்காக வாடகை தாயாக மாறிய தாய்!
Page 1 of 1
பெற்ற மகளுக்காக வாடகை தாயாக மாறிய தாய்!
சென்னையில் பிள்ளை பெற முடியாத தன் மகளுக்காக தாயே வாடகை தாயாக மாறியுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் திருமணமான உடனே கருவுற்றுள்ளார்.
ஆனால் 7–வது மாதத்தில் நஞ்சு பிரிந்து கடும் உதிரப்போக்கு ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஏற்கனவே சிசு இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்ததோடு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், குழந்தையையும், கர்ப்பப்பையையும் சேர்த்து எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் இனி மனைவியால் கருவுற முடியாது என்பதையும் மீறி மனைவியின் உயிரை காப்பாற்ற வேறு வழியில்லாததால் ஒத்து கொண்டுள்ளார்.
இதையடுத்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று வாங்க பல இடங்களுக்கும் அலைந்து லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்தும் பலன் இல்லை.
கடைசியில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுயபோது, மருத்துவர்கள், உறவு பெண்கள் யாராவது வாடகை தாயாக வந்தால் மிகவும் நல்லது என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து மருத்துவர்களின் கவுன்சிலிங்கால் தயக்கத்தை விட்டு அந்த பெண்ணின் தாயே தனது மகளுக்கு வாடகை தாயாக குழந்தை பெற்று கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.
அவருக்கு வயது 61 என்பதால், மாதவிடாய் நின்று போயிருந்தாலும், கர்ப்பப்பை நன்றாக இருந்துள்ளது.
இதையடுத்து மருந்து மூலம் மாதவிடாயை வரவழைத்து, அதன் பிறகு கருவை சுமப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
எதிர்பார்த்தபடியே கரு நல்ல நிலையில் வளர்ந்ததால், கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தையை பெற்று மகளுக்கு அவர் பரிசளித்தார்.
மருத்துவர்கள் இதுபற்றி கூறுகையில், மருத்துவ உலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
மேலும், மகளுக்காக தாயே வாடகை தாயாக மாறி இருப்பது இந்தியாவில் இதுதான் முதல்முறை. என்றும் வருகிற 8–ந் திகதி நடைபெறும் மகளிர் தினவிழாவில் அந்த பெண்ணை கவுரவிக்க இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திருடிய மகனை திருத்த முயன்ற தாய்: கொலைகாரியாக மாறிய பரிதாபம்
» பெற்ற குழந்தையை விஷம் வைத்து கொன்றது ஏன்? தாய் பரபரப்பு வாக்குமூலம்
» தாய்க்குத் தாயாக.....
» பெற்ற குழந்தையை விஷம் வைத்து கொன்றது ஏன்? தாய் பரபரப்பு வாக்குமூலம்
» தாய்க்குத் தாயாக.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum