Top posting users this month
No user |
Similar topics
இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற சன் ஷி கப்பலுக்கு 6 லட்சம் டொலர்களை செலவு செய்துள்ள கனடா
Page 1 of 1

கனேடிய குடிவரவு சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த காரணமாக அமைந்த, 492 இலங்கை புகலிட கோரிக்கையாளர்களுடன் கனடாவுக்கு ஏற்றிச் சென்ற கப்பலை விற்பனை செய்யும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
எம்.பி சன் ஷி என்ற இந்த கப்பலை நிறுத்தி வைப்பதற்காகவும் பராமரிக்கவும் 6 லட்சம் டொலர்களை கனேடிய அரசாங்கம் செலவிடப்பட்டுள்ளது.
கப்பலை கொள்வனவு செய்ய எவரும் முன்வராத காரணத்தினால், கனேடிய எல்லை சேவைகள் முகவர் அமைப்பு நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஸ்டெபானி ஹூடெல் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் குறித்த அமைப்பின் பொறுப்பில் இருந்து வருகிறது. கப்பலில் இருக்கும் குப்பைகளை அகற்றுவதற்காக எல்லை சேவைகள் முகவர் அமைப்பு விக்டோரிய என்ற நிறுவனத்திற்கு 157.697 டொலர்களுக்கு ஒப்பந்தம் ஒன்றை வழங்கியது.
இந்த கப்பல் தற்போது வான்கூவருக்கு தென் கிழக்கில் ஹானாசீஸ் தீவில் நங்குகூரமிடப்பட்டுள்ளது.
கப்பலை கழுவுதல், அவற்றில் இருக்கும் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கழிவு எண்ணெய்களை அப்புறப்படுத்தல் போன்ற பணிகள் இதில் உள்ளடங்கும்.
சன் ஷீ கப்பல் 2010 ஆம் ஆண்டு கனடாவை சென்றடைந்தது. இரண்டு வருடங்கள் நானிமோ என்ற தனியார் கப்பல் முனையத்தில் இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களுக்காக 4 லட்சம் டொலர்களை தாம் செலவிட்டுள்ளதாக கனேடிய எல்லை சேவைகள் முகவர் அமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.
கப்பலை கொள்வனவு செய்ய ஒருவரை கண்டறிவது குறித்து ஆராய சமஷ்டி நீதிமன்றம் குழு ஒன்றை நியமித்துள்ளது. எவ்வாறாயினும் கப்பலை பராமரிக்க அரசாங்கம் எவ்வளவு பணத்தை செலவிட்டது என்பது குறித்து பேச்சாளர் கூறவில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த ராஜபக்ச என்றும் எப்போதும் மக்களுக்கு கடனாளியே! இரவு விருந்துபசார செலவு 17 லட்சம் நிலுவையில்..!
» "புதிய சட்டத்தில் இலங்கை சென்ற பலருக்கு கனடாவில் ஆபத்து".
» செய்மதி உபகரணங்களுடன் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற யாத்திரீகர்கள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum