Top posting users this month
No user |
Similar topics
பொய்யான தகவல்களை வழங்கும் அமைச்சரவை பேச்சாளர்
Page 1 of 1

தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்த பின்னரே அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் நடைபெறும் காலம் குறித்து தற்போது கூறமுடியாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று கூறியது உண்மையல்ல என தெரியவருகிறது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று அவர் இதனை கூறியிருந்தார்.
எனினும் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு தயாரித்துள்ள தேர்தல் முறை திருத்தத்திற்கு சகல அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கினால் தேர்தல் முறையில் மாற்றங்களை செய்ய முடியும் என்பதே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
தற்போதைய அரசாங்கத்திற்கு 100 நாட்களுக்கு மாத்திரமே மக்கள் ஆணையை வழங்கியிருப்பதாகவும் ஏப்ரல் 23 ஆம் திகதி நிச்சயமாக நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் பிரதமர் கூறியிருந்தார்.
தேர்தல் முறையில் மாற்றம் குறித்து இரண்டு பிரதான கட்சிகள் இடையில் பிரச்சினைகள் இல்லை. சிறிய கட்சிகள் மாத்திரமே பிரச்சினைகளை எழுப்பியுள்ளன. எனினும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவை பற்றி எதுவும் பேசப்படவில்லை.
அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று வெளியிட்ட பொய்யான தகவல் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரத்ன இதுவரை மூன்று முறை புதிய அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என அவர் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். எனினும் ஜனாதிபதி அப்படியான எண்ணத்தை கொண்டிருக்கவில்லை.
இதனை தவிர கொழும்பு துறைமுக நகரம் குறித்து அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பதாக ராஜித கூறியிருந்ததுடன் அப்படியான தீரமானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. கே.பி வெளிநாடு சென்று விட்டதாக ஒரு முறை தெரிவித்திருந்தார். ஆனால் கே.பி வெளிநாடு செல்லவில்லை.
அத்துடன் முன்னாள் பிரதமர் நீதியரசர் மொஹான் பீரிஸ், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக ராஜித சேனாரத்ன கூறியிருந்தபோதும் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன வெளியிடும் தகவல்களை ஊடகவியலாளர்களை வேறு அமைச்சர்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கர்ப்பிணி தாய்மாருக்கு மாதம் இரண்டாயிரம் வழங்கப்படும்!– அமைச்சரவை பேச்சாளர்
» முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாடு திரும்பினார்- நாட்டில் மரண பயமில்லை: முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
» பொய்யான வழக்குகளில் இளைஞர்களை சிக்க வைக்க வேண்டாம்! பொலிஸாருக்கு நீதவான் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum