Top posting users this month
No user |
Similar topics
தேர்தல் முறை மாற்றம் எங்கள் பிரதிநிதித்துவத்தை பாதிக்க இடம் கொடுக்க முடியாது!- மனோ கணேசன்
Page 1 of 1

இன்று தேர்தல் முறை மாற்றம் பற்றி பெரிதும் பேசப்படுகிறது. இந்த மாற்றத்துக்கு நாங்களும் தயார். ஆனால், இந்த மாற்றம் இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களுக்கு ஊறு விளைவிக்க முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறை மாற்றம் கொண்டு வரப்பட்டால், அந்த திருத்தங்கள் சிறுபான்மை மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களுக்கு ஊறு விளைவிக்க கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய நிறைவேற்று சபையில் எமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதி காப்பாற்றப்படும் என நான் நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் வேளைகளில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள், பெரிய கட்சிகளுக்கு தேவைப்படுகின்றன. அதனால் எமக்கு பேரம் பேசும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
ஆகவே நீண்ட காலமாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதை ஆதரிக்கவில்லை. ஆனால், பிற்காலத்தில் நாட்டின் போக்குடன் ஒத்துப்போவதற்காக நாம் இதற்கு ஒத்துழைத்தோம்.
எனினும் இன்று எமது அந்த ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டு, தேர்தல் முறை மாற்றம் என்ற பெயரில் எமது பிரதிநிதித்துவங்களை குறைத்து எமது தலையிலேயே கையை வைக்க சிலர் முயற்சிக்கின்றார்கள். அதற்கு நாம் இணங்க முடியாது.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் தினேஷ் குணவர்த்தன அறிக்கையை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அதை அப்படியே நடைமுறைப்படுத்த முடியாது. இந்த நிலைப்பாட்டிலேயே இந்நாட்டின் பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் இருக்கின்றன என நான் நம்புகிறேன்.
இந்த நாட்டு ஜனத்தொகை 2 கோடியே 4 லட்சம் ஆகும். நமது பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர். அதாவது ஏறக்குறைய 90,000 பேருக்கு ஒரு எம்பி இருக்கின்றார்.
இந்த நாட்டில் 31 லட்சம் தமிழர்களும், ஏறக்குறைய 19 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். எனவே குறைந்தபட்சம் 34 தமிழ் எம்பிக்களும், 21 முஸ்லிம் எம்பிக்களும் இருக்க வேண்டும்.
எனது மாவட்டமான கொழும்பில் சுமார் 270,000 தமிழர்களும், 260,000 முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். இதன்படி கொழும்பில் ஏறக்குறைய மூன்று தமிழ் எம்பிக்களும், மூன்று முஸ்லிம் எம்பிக்களும் தெரிவு செய்யப்பட வேண்டும்.
இதற்கு இன்றைய விகிதாசார முறைமையிலேயே முழுமையாக வழியில்லை. இந்நிலையில், நீங்கள் கொண்டு வர நினைக்கும் புதிய முறையில் இப்போது இருக்கும் இந்த பிரதிநிதித்துவங்களும் இல்லாமல் போகும் சாத்தியமே அதிகம்.
பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடும் போது, ஒரு ஒத்துழைப்பின் அடிப்படையில் சிறிது விட்டுக்கொடுப்போம் என்றால், அது கடைசியில் எங்கள் தலையிலேயே வந்து இடியாய் விழுகிறது.
பெரும்பான்மை இன வேட்பாளர்களின் விருப்பு வாக்கு போட்டிகளின் காரணமாக நமக்கு உரிய சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்றன. தமிழரின் வாக்கு வேண்டும், ஆனால் தமிழருக்கு சீட்டு கிடையாது என்ற நிலைமை நிலவுகிறது.
எங்கள் இனத்து பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள எங்களுடன் ஒத்துழைத்து இணைங்க மறுப்பவர்களுடன் ஒத்துழைப்பது எமக்கு கடினமானது.
எனவே இந்த விருப்பு வாக்கு முறைமையை மாற்ற நாமும் விரும்புகிறோம். ஆனால், அந்த மாற்றத்துடன் தமிழ் பேசும் மக்களுக்கு இனரீதியான ஒதுக்கீடுகளை செய்து விடுங்கள்.
பாராளுமன்றத்தில், எங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்புகள் எங்களுக்கு அவசியம். இந்த நாட்டில் எந்த மூலையிலும் எங்கள் இனம் துன்பங்களை எதிர்கொள்ளும் வேளைகளில் அவை எங்களுக்குத்தான் வலிக்கும். தேர்தல் நேரத்தில் மாத்திரம் வந்து வாக்குகளை வாங்கி போகின்றவர்களுக்கு அவை வலிக்காது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அவசர தேர்தல் முறை மாற்றம் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு செய்யப்படும் துரோகம்: மனோ கணேசன்
» தேர்தல் முறை திருத்தம் பற்றி கருத்து வெளியிட முடியாது!- எம்.ஏ.சுமந்திரன்
» மைத்திரிபாலா மகிந்தாவைக் காட்டிக் கொடுக்க மாட்டார்: தேர்தல் வெற்றிக்கு வட-கிழக்கே காரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum