Top posting users this month
No user |
Similar topics
கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக கூட்டமைப்பு மாறும்: அமீர் அலி
Page 1 of 1

கிழக்கு மாகாணத்திலே தனியாகவே ஆட்சியை செய்ய வேண்டும் என்று மிகவும் பிடிவாதமாக இருந்த காரணத்தினால் தான் மீண்டும் முதலமைச்சர் விடயத்திலே இழுபரி ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் 2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி பிரதான மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெளிவாக பேசி இருக்க வேண்டும். கிழக்கு மாகாணத்திலே இனி வரப்போகின்ற தேர்தலிலே ஆளுந்தரப்பை நிர்ணயிக்கின்ற அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கப் போவது என்பதில் எவரும் மாற்றுக்கருத்துக் கொள்ளத் தேவையில்லை.
இம்முறை கிழக்கு மாகாண சபையில் 11 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றார்கள். எதிர்வரும் காலங்களிலே போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 16 ஆசனங்களை எடுத்து ஆட்சி அமைக்கின்ற நிகழ்வுகள் வருகின்ற போது கௌரவமான முறையில் அதில் பங்கை எங்களுக்குத் தரவேண்டும் என்று அவர்கள் இருப்பார்கள் என்று நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.
அந்த எதிர்பார்ப்புக்கு நாங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது அவர்களுடைய எதிர்பார்ப்பில் 100 வீதம் கொடுக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை அவர்களது கோரிக்கைகளை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் இல்லை என்று சொன்னால் கிழக்கு மாகாணத்திலே காலங்காலமாக அதிகாரங்களை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு காலகட்டம் ஏற்பட்டுப் போகலாம்.
அரசியல் என்பது உடனடிப் பிரச்சினைக்கு உடனடி தீர்மானம் கான்கின்ற விடயம் மாத்திரம் அல்ல எதிர்காலத்திலே வரக்கூடிய பிரச்சினையை மையப்படுத்தி ஒரு தூர நோக்கத்தோடு நாங்கள் செயற்பட வேண்டும்.
கிழக்கு மாகாண சபை இவ்வாறு தொடர்ந்து பிரச்சினைகளோடு நடந்து கொண்டு இருக்கும் என்று சொன்னால் நான் நினைக்கிறேன் அவசர அவசரமாக மாகாண சபை கலைக்கப்படலாம் என்ற ஒரு விடயமும் அதில் மறைந்து கிடக்கின்றது என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பி.எம்.காலித், ஹைராத் ரான்ஸ்போட் நிருவாகசபை பொருலாளர் எம்.எஸ்.அன்வர் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு கோருவதில் தவறில்லை: அரியம் எம். பி
» கிழக்கு மாகாணத்தில் நல்லாட்சி நடைபெறவில்லை! பிள்ளையான் குற்றச்சாட்டு
» கிழக்கு மாகாணத்தில் 684 பேருக்கு முதலமைச்சரால் நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum