Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்த வாரம் என்ன நடக்கவிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

Go down

இந்த வாரம் என்ன நடக்கவிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! Empty இந்த வாரம் என்ன நடக்கவிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

Post by oviya Mon Mar 02, 2015 1:11 pm

அன்பார்ந்த ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ராசிக்கு என்ன நடக்கவிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்,
மேஷம்

எதிலும் அலைச்சல் அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய காரியங்களும் நீண்ட இழுபறி தரும். எதிர்கால நலன் கருதி செய்ய திட்டமிட்ட முக்கியமான செயல்களை உடனடியாக துவக்குவதை தவிர்ப்பது நல்லது.

எந்த ஒரு விஷயத்திலும் சரியான முடிவெடுக்க இயலாமல் திணறுவீர்கள். நெருக்கமானவர்கள் உங்களை குழப்புவார்கள்.

குடும்பத்தினரை திருப்திபடுத்த முடியாமல் போகும். வரவு தடைபடும். பொருளாதார சிக்கல் ஏற்படும். உங்கள் பேச்சை மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலை உள்ளதால் கவனமாக பேசவும்.

வீண் விவாதத்தை தவிர்க்கவும். வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை. உறவினர்கள் வழியில் வீண் குழப்பங்கள் வரும். பிள்ளைகளால் கூடுதல் செலவுகள் வரும்.

வாழ்க்கைத்துணையின் மனநிலையைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் இருக்கும். பூர்வீக சொத்துவிவகாரங்களில் திடீர் பிரச்னைகள் முளைக்கும்.

வேலைக்குச் செல்வோர் மேலதிகாரியின் அலைக்கழிப்பிற்கு ஆளாவர். எதிர்நீச்சல் போட்டு வெற்றி காண வேண்டிய வாரம் இது.

வழிபாடு: விநாயகருக்கு சிதறுதேங்காய் உடைத்து வழிபடுங்கள்.

ரிஷபம்

கவலைகளை எல்லாம் மறந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நினைத்ததை நடத்தி முடித்து வெற்றி காண்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் தானாக நடைபெறும்.

உங்களைத் தவறாக எண்ணியவர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் வார்த்தைகள் நான்கு பேர் மத்தியில் நன்மதிப்பு பெறும்.

தடைபட்டிருந்த பண வரவு வரும். சேமிப்பு உயரும்.

வீட்டிற்கு தேவையான நவீன உபகரணங்கள் வாங்குவீர்கள். ருசியாக சாப்பிடுவதில் ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு கூடும். வாகன ஆதாயம் இருக்கும்.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் மன வருத்தம் தரும். கணுக்கால், குதிகால் வலி இருக்கும். வாழ்க்கைத்துணையின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து அவரது தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு ஊதிய உயர்வு இருக்கும். உங்கள் திறமையை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வாரம் இது.

வழிபாடு: சஷ்டி விரதம் நன்மை தரும்.

மிதுனம்

குழப்பம், சங்கடம் இருக்கும். எந்த ஒரு காரியமும் எளிதில் முடிவிற்கு வராது இழுபறி தரும். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் அமையும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றும்.

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சிக்கன முயற்சிகள் பயன் தராது. பேச்சால் பிரச்னையும், வீண் மனஸ்தாபமும் தோன்றும். அண்டை வீட்டுக்காரர்களோடு வம்புச்சண்டை உருவாகும்.

சம்பந்தமில்லாத விவகாரங்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. வித்தியாசமான முயற்சிகள் வீண் விரயம் தரும். ஆன்மிகப் பிரயாணங்களில் மன நிம்மதி கிடைக்கும்.

வயதில் மூத்த உறவினர் ஒருவரின் ஆலோசனை உங்களுக்கு பயன்தரும். பிள்ளைகளின் சுறுசுறுப்பான செயல்கள் பிரமிக்க வைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் மனநிலையைப் புரிந்துகொண்டு தேவைகளை நிறைவேற்றி வைப்பார்.

வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் வீண் பழி சுமக்க நேரிடும். நேரத்தினை உணர்ந்துகொண்டு அமைதி காப்பது அவசியம். சங்கடங்களை சமாளிக்க வேண்டிய வாரம் இது.

வழிபாடு: தினமும் 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி வரவும்.

கடகம்

எடுத்த காரியங்கள் வெற்றி தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் உங்கள் மனதிற்கு சரியென்று தோன்றுவதை தைரியமாய் செய்வீர்கள்.

குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு தனிமதிப்பு இருக்கும். குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தேவையானதை கேட்காமலேயே செய்வீர்கள். வீண் வம்பு பேசுபவர்களிடம் இருந்து விலகுவீர்கள்.

அண்டை, அயலாரோடு இணைந்து பொது விவகாரங்களில் முன்நின்று செயல்படுவீர்கள். உடன்பிறந்தாரோடு மனஸ்தாபம் தோன்றும். பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினை பற்றிய பேச்சுகள் எழும். உதவி கேட்போரின் உண்மை நிலையை ஆராய்ந்து உதவுவது நல்லது.

பிள்ளைகளின் செயல்கள் உங்களை பெருமை கொள்ளச் செய்யும். தோள், முதுகுவலியால் உடல்நிலை பாதிப்படையும். வாழ்க்கைத்துணைக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் தொழிலில் சிறப்பான வெற்றி தரும்.

வேலை பார்ப்போருக்கு தற்காலிக இடமாற்றம் இருக்கும். செயல்திறன் வெளிப்படும் வாரம் இது.

வழிபாடு: லக்ஷ்மிநரசிம்மரை வணங்கி வாருங்கள்.

சிம்மம்

பேச்சுத்திறமையால் காரிய சாதனை உண்டு. அதே நேரத்தில் அதிகாரமான பேச்சால் அவப்பெயர் வரும். பேச்சில் நிதானம் தேவை. அடுத்தவர்கள் பற்றிய உங்களது அபிப்ராயத்தை ஒளிவு மறைவு இன்றி முகத்திற்கு நேராக சொல்லி சங்கடத்தில் சிக்கி கொள்வீர்கள்.

குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். நிலுவையில் உள்ள நீண்ட நாள் பாக்கி ஒன்று வசூலாகும். கண் பார்வை கோளாறுகளுக்கு உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

உடன்பிறந்தாருடன் கொண்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். ஆரோக்கியமான உணவிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். செலவை சமாளிக்கும் அளவுக்கு வரவு இருக்கும்.

உதவி கேட்டு உங்களை நாடி வந்த உறவினருடன் வீண் மனஸ்தாபம் வரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் இக்கட்டான சூழலில் கைகொடுக்கும்.

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். சொல்வாக்கினால் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் வாரம் இது.

வழிபாடு: சக்கரத்தாழ்வாரை வணங்கி வாருங்கள்.

கன்னி

எடுத்த காரியங்கள் எளிதில் நடைபெறும். எந்த ஒரு காரியத்திலும் நேரடியாக ஈடுபடாது நெருக்கமானவர்களின் துணையோடு சாதிப்பீர்கள்.

அவசரத்தை தவிர்ப்பது அவசியம். முன்கோபத்தால் அவப்பெயர் ஏற்படும். குடும்பத்தினர் தங்கள் தேவைகளுக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பர்.

பண வரவு சீராக இருக்கும். ஞாபக மறதியால் சங்கடங்கள் வரும். உடன்பிறந்தாரோடு வீண் மனஸ்தாபம் தோன்றும். உறவினர்களோடு கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி காண்பீர்கள்.

பிள்ளைகளின் செயல்களைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் தோன்றும். கொழுப்புசத்து மிக்க தின்பண்டங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

வாகன பராமரிப்பு செலவுகள் இருக்கும். குடும்ப பெரியோர்களின் ஆசி மன நிம்மதி தரும். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும்.

குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகள் உங்களை திறம்பட வழிநடத்தும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் விழிப்புடன் பணியாற்றுவது அவசியம். விழிப்புடன் இருந்து எடுத்த காரியத்தில் வெற்றி காணும் வாரம் இது.

வழிபாடு: வெள்ளியன்று கோபூஜை செய்து வணங்குவது நன்மை தரும்.

துலாம்

தேவையற்ற பிரச்னைகளால் நிம்மதி குறையும். வீண் வம்புகள் தேடி வரும். மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். எந்த இடத்திலும் அமைதி காக்க வேண்டியது அவசியம்.

அத்தியாவசியமான நேரத்தில் தீரவிசாரித்து இறங்குவது நல்லது. குடும்பத்தினரை ஒருங்கிணைத்து செயல்படுவதில் சிரமம் தோன்றும்.

உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். வரவிற்கு ஏற்ப செலவு காத்திருக்கும். யாரை நம்பியும் ஜாமீன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது. உடன் பிறந்தாரோடு வீண் மனஸ்தாபம் தோன்றும். பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும்.

பிள்ளைகளின் செயல்களால் மன வருத்தம் உண்டாகும். முன்பின் தெரியாத நபர்களுக்கு உதவப்போய் அநாவசிய தொந்தரவிற்கு ஆளாவீர்கள்.

வாழ்க்கைத்துணையின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்வதில் தடுமாற்றம் இருக்கும். பணிக்குச் செல்வோருக்கு அலுவலகத்தில் போட்டியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய வாரம் இது.

வழிபாடு: தந்வந்திரி பெருமாளை வணங்கி வாருங்கள்.

விருச்சிகம்

ஆசைகள் அதிகரிக்கும். ஆசைகளை நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்துவீர்கள். சிந்தனையை செயல்படுத்துவீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை புரிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

சிக்கன முயற்சிகள் வெற்றி பெறும். சேமிப்பு உயரும். உங்கள் நெடுநாளைய விருப்பத்தை நிறைவேற்றி கொள்ள கூடுதலாக செலவழிப்பீர்கள். பால்ய சிநேகிதர் ஒருவரை சந்திப்பீர்கள்.

ருசியான உணவுகளில் நாட்டம் அதிகரிக்கும். குடியிருக்கும் வீட்டை சுத்தப்படுத்துவீர்கள். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறும்.

வாழ்க்கைத்துணையின் உடன்பிறந்தோர் தங்கள் குடும்பப் பிரச்னைக்குத் தீர்வு காண ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவர். குடும்பப் பெரியவர்களுக்கு சேவை செய்வதை கடமையாக எண்ணுவீர்கள்.

கேளிக்கை, கொண்டாட்டம், சினிமா, பிக்னிக் முதலான பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டும். வேலைக்குச் செல்வோருக்கு அலுவலகத்தில் ஏற்றமான சூழல் நிலவும்.

சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் வாரம் இது.

வழிபாடு: மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

தனுசு

சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியவெற்றி நிச்சயம். வாழ்க்கை தரம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

புதிய வீடு வாங்கும் முயற்சியில் உள்ளோருக்கு பணமுடை நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிட்டும். ஆரோக்யமான உணவு வகைகளில் அதிக ஆர்வம் ஏற்படும்.

அண்டை வீட்டுக்காரர்களோடு இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய நவீன வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு கூடும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு.

பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தம்பதியருக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர் ஒருவர் உதவி கேட்டு உங்களை நாடி வரக்கூடும். குடும்பப் பெரியவர்களுடன் உண்டான மனஸ்தாபம் நீங்கும்.

உத்யோகம் பார்ப்போருக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். சுகம் காணும் வாரம் இது.

வழிபாடு: சந்தோஷிமாதாவை வணங்கி வாருங்கள்.

மகரம்

தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தை எளிதாக செய்து முடிப்பீர்கள்.

எந்த ஒரு காரியத்திற்கும் அடுத்தவர்களை நம்பாது தனித்துச் செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவீர்கள்.

பேச்சில் கராறாக இருந்தாலும் நியாயம் இருக்கும். சேமிப்பு புதிய சொத்தாக உருமாறும். தங்கம், வெள்ளி நகைகள் வாங்குவீர்கள். ருசியான உணவிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள்.

வண்டி, வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கை அவசியம். எதிர்பாராத பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வழியில் வந்து சேரும் தகவல் ஒன்று மன வருத்தம் தரும்.

பிள்ளைகளின் முயற்சிகளுக்கு பக்கபலமாய் துணை நிற்பீர்கள். உடல்நிலையில் கவனம் தேவை. தம்பதியராக கலந்தாலோசித்து செயல்படும் காரியங்களில் சிறப்பான வெற்றி கிட்டும்.

வேலை பார்ப்போர் அலுவலகத்தில் உண்டாகும் கூடுதல் பணிச்சுமையை அசாதாரணமாக சமாளிப்பார்கள். தைரியத்தால் சாதிக்கும் வாரம் இது.

வழிபாடு: விஷ்ணுதுர்கையை வழிபட்டு வாருங்கள்.

கும்பம்

பணிச்சுமை அதிகரிக்கும். அசராமல் காரியமாற்றி வெற்றி பெறுவீர்கள். சவால்களை எளிதில் எதிர்கொள்வீர்கள். உங்களை விமர்சித்தவர்கள் வியக்கும் வகையில் விரைவாக செயல்படுவீர்கள்.

குடும்பத்தினரை ஒருங்கிணைத்து முக்கியமான பிரச்னைகளில் முடிவெடுப்பீர்கள். உங்கள் வார்த்தைகளும், ஆலோசனைகளும் அடுத்தவர்களிடம் அங்கீகாரம் பெறும். புதிய வீடு கட்டும் முயற்சியில் எதிர்பார்த்த பண உதவி கிட்டும்.

ஆரோக்கியமான உணவிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. பிள்ளைகளின் வேகமான செயல்களை கட்டுப்படுத்துவீர்கள்.

வாழ்க்கைத்துணையின் பார்வையைக் கொண்டே அவரது எண்ணத்தைப் புரிந்து கொள்வீர்கள். மூட்டு வலி, முதுகுவலி பிரச்னையால் உடல்நிலையில் சிரமம் ஏற்படும்.

உத்யோகத்திற்குச் செல்வோர் அலுவலகத்தில் கடுமையான சவால்களைச் சமாளித்து மேலதிகாரியின் பாராட்டுதலுக்கு ஆளாவர். மதிப்பும் மரியாதையும் உயரும் வாரம் இது.

வழிபாடு: பகவத்கீதையை பொருளுணர்ந்து படித்து வாருங்கள்.

மீனம்

மன வலிமை அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்வீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் உடனுக்குடன் செய்து முடித்துவிட வேண்டும் என்று அவசரப்படுவீர்கள்.

குடும்பத்தில் சலசலப்போடு கலகலப்பும் கலந்திருக்கும். பேச்சில் அதிகாரம் வெளிப்படும். சொல்வாக்கால் செல்வாக்கு உயரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

பால்ய சிநேகிதர் ஒருவரை சந்திப்பீர்கள். சூடான பொருட்களை கவனத்தோடு கையாள்வது அவசியம். எதிர்பாராத பிரயாணம் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை பயன்தரும். பிள்ளைகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

உஷ்ண உபாதையால் உடல்நிலை பாதிக்கப்படும். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பீர்கள்.

அவரது உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் தங்கள் திறமையை நிரூபித்து தனித்துவத்தை நிலைநாட்டுவர். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காணும் வாரம் இது.

வழிபாடு: ஸ்ரீநிவாஸ பெருமாளை வணங்கி வரவும்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum