Top posting users this month
No user |
Similar topics
இந்த வாரம் உங்களுக்கு கிடைக்கவிருப்பது என்ன?
Page 1 of 1

அன்பார்ந்த ராசி நேயர்களே இதோ உங்களுக்கான இந்த வார ராசி பலன்,
மேஷம்
அலைச்சல், சங்கடங்கள் இருக்கும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக அமையும். இழுபறிக்கு பின்னர் எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். ஆன்மிக விவகாரங்களில் அதிக ஈடுபாடு ஏற்படும்.
குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றி மறையும். வரவை விட செலவு கூடும். சொன்ன வாக்கை சரியான நேரத்திற்கு காப்பாற்ற இயலாது போகும்.
இதனால் நெருங்கிய உறவினர் ஒருவரோடு மனஸ்தாபம் தோன்றக்கூடும். அடுத்தவர்களுக்கு உதவ முற்பட்டு வீண் செலவு ஏற்படும்.
நெருங்கிய நண்பரிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அண்டை வீட்டாரோடு குடும்ப விவகாரங்களை விவாதிப்பதைத் தவிர்க்கவும்.
பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்தாலும் அவர்களது முன்னேற்றம் கண்டு பெருமை அடைவீர்கள்.
குடும்பப் பெரியவர்கள் உங்கள் செயலுக்கு துணையிருப்பர். தொழிலில் வீண் அலைச்சல் இருந்தாலும் லாபம் கிடைக்கும். சரிசம பலன்களைத் தரும் வாரம் இது.
ரிஷபம்
தொடர் பணிகளால் ஓய்வு எடுக்கமுடியாமல் போகும். எதிலும் படபடப்பாக இருப்பீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்பதில் அதிக கவனம் கொள்வீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் தோன்றும்.
வரவும், அதற்குரிய செலவும் இருக்கும். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக கூடுதலாக செலவு செய்வீர்கள். உங்கள் பேச்சு மற்றவர் மனதைப் புண்படுத்தும் என்பதால் பேச்சில் கவனம் தேவை.
நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். பொழுது போக்கில் நாட்டம் அதிகரிக்கும். கைத்தொழிலில் ஈடுபாடு தோன்றும். உறவினர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சி தரும், பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் உண்டாகும்.
பார்வைக் குறைபாடு காரணமாக தலைவலி வரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்களைச் சிறப்பாக செயல்பட வைக்கும். உத்யோகம் பார்ப்போர் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் வாங்குவர். மாணவர்கள் பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுவர். நன்மை தரும் வாரம் இது.
மிதுனம்
முக்கியமான பணிகளை வார இறுதியில் செய்வது வெற்றி பெற உதவும். எதிர்பாராத வகையில் திடீரென்று பணிச்சுமை உயரும். குடும்பத்தில் நிலவும் சலசலப்பை சரி செய்வதில் முக்கியப் பங்காற்றுவீர்கள்.
குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பொருட்களின் தரத்தை பரிசோதித்து வாங்குவது உத்தமம்.
கூர்மையான பொருட்களைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கை தேவை. பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
அண்டை வீட்டார் தங்கள் குடும்பப் பிரச்னைக்குத் தீர்வு காண உங்கள் ஆலோசனை நாடி வருவர். உறவினர் ஒருவர் நீங்கள் செய்த உதவிக்கு கைமாறாக உங்கள் பணிகளுக்குத் துணைநிற்பார்.
பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதில் இடம்பிடிக்கும்.
கவுரவ செலவுகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்வோருக்கு அலுவலகத்தில் கூடுதல் பணிசுமை இருக்கும். சரிசம பலன்களை அனுபவிக்கும் வாரம் இது.
கடகம்
கடந்த சில நாட்களாக இழுபறி தந்த காரியம் ஒன்று முடிவிற்கு வரும். வாழ்க்கை தரம் உயரும். ஓய்வின்றி தொடர்ந்து செயல்படுவீர்கள்.
சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் படபடப்பை தவிர்க்க வேண்டியது அவசியம். குடும்பத்தினர் தங்கள் தேவைக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பர். வரவு சீராக இருக்கும். ஆன்மிக செலவுகள் அதிகரிக்கும்.
பார்வை குறைபாட்டால் தலைவலி ஏற்படும். உடன்பிறந்தாரோடு இருந்த மனஸ்தாபம் நீங்கும். உடல் நலம் பேண உணவில் கூடுதல் கவனம் அவசியம். உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள்.
வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் செயல்கள் முழு திருப்தி தரும். வாழ்க்கைத்துணையின் எண்ண ஓட்டத்தை புரிந்துகொள்வதில் தடுமாற்றம் தோன்றும்.
குடும்பப் பெரியவர்கள் உங்களுக்கு பக்கபலமாய் இருப்பர். வேலைக்குச் செல்வோருக்கு அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். சுயதொழில் செய்வோருக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். முன்னேற்றம் தரும் வாரம் இது.
சிம்மம்
சங்கடங்கள் விலகி முன்னேற்றமான சூழல் உருவாகும். எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
சம்பந்தமில்லாத விவகாரங்களில் ஒதுங்கி இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். பண வரவு சீராக இருக்கும். கடன் சுமை கூடும்.
பேச்சில் கூடுதல் கவனம் அவசியம். சூடான பொருட்களைக் கையாளும்போது அதிக எச்சரிக்கை தேவை. உடன்பிறந்த சகோதரியுடன் வீண் மனஸ்தாபம் உருவாகும்.
முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்திற்கு ஆளாவீர்கள்.
உறவினர் ஒருவர் பண உதவி கேட்டு மறுக்க வேண்டிய சூழல் உருவாகும். விட்டுக் கொடுத்து செல்வதால் தம்பதியருக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியில் சுபசெலவுகள் உண்டாகும்.
அதிகப்படியான உழைப்பினால் உடல் தளர்வடையும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறும் வாரம் இது.
கன்னி
அனைத்து விஷயங்களிலும் கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத நபர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. பேச்சில் கவனம் அவசியம். அதே நேரம் நல்லவர், தீயவர்களை அடையாளம் காண வேண்டியதும் அவசியம்.
குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். குடும்பத்தினரின் விருப்பத்திற்காக கூடுதலாக செலவழிப்பீர்கள்.
செலவுகளைச் சமாளிக்கின்ற வகையில் பணவரவு அமையும். உறவினர்களின் சந்திப்பு சந்தோஷம் தரும். செல்போனை எங்காவது மறதியாக வைத்துவிட்டு அவதிப்படுவீர்கள்.
ஞாபகமறதியால் செலவு கூடும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உடல்நிலையில் கூடுதல் கவனம் அவசியம்.
பிரயாணத்தின்போது எச்சரிக்கை தேவை. உத்யோகத்திற்குச் செல்வோர் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரின் துணையுடன் முன்னேற்றம் காண்பர். கவனத்தோடு செயலாற்ற வேண்டிய வாரம் இது.
துலாம்
எந்த ஒரு காரியத்தையும் உடனுக்குடன் செய்து முடிக்க எண்ணுவீர்கள். ஆனால் உங்கள் வேகத்திற்கு மற்றவர்கள் ஒத்துழைக்க மறுப்பார்கள்.
குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள் வாங்குவீர்கள்.
எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும் போது அவற்றின் தரத்தை பரிசோதித்து வாங்குவது அவசியம். பண விவகாரங்களைத் தனித்துக் கையாள்வதை தவிர்க்கவும். உறவினர் ஒருவர் கடன் உதவி கேட்டு உங்களை நாடி வருவார்.
உணவில் ருசிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். பிள்ளைகளின் புத்திசாலித்தனமான செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். திடீர் மருத்துவ செலவு தோன்றும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.
வீண் விவாதத்தால் நண்பரோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் வெற்றிக்கு துணைபுரியும். பணிக்குச் செல்வோருக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். சரிசம பலன் தரும் வாரமிது.
விருச்சிகம்
உற்சாகம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். சுற்றியுள்ளவர்கள் பல்வேறு ஆலோசனைகள் சொன்னாலும் உங்களுக்கு சரியென்று பட்டதை மட்டும் செய்வீர்கள்.
குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தினரின் சந்தோஷத்திற்காக கூடுதலாக செலவழிப்பீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள்.
பொருட்களின் தரத்தை பரிசோதித்து வாங்குவது அவசியம். தொலைக்காட்சி, சினிமா முதலான பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர் ஒருவரிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும்.
உறவினர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சி தரும். வாகன ஆதாயம் உண்டு. புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி கடனுதவி கிட்டும்.
பிள்ளைகளின் செயல்களைப் புரிந்து கொள்ள சிரமப்படுவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிக்கு ஆலோசனை வழங்கி நற்பெயர் வாங்குவார்கள்.
தன்னம்பிக்கையால் வெற்றி காணும் வாரம் இது.
தனுசு
சாதக பாதகங்கள் கலந்திருக்கும். நினைத்த காரியம் நடப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். அலைச்சல் அதிகமானாலும் எடுத்த காரியத்தை நடத்தி முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள்.
வரவு சீராக இருக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் சேமிப்பு கரையும். உடன்பிறந்தாருடன் மனஸ்தாபம் உருவாகும். செல்போன் முதலான தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து கைகொடுக்காமல் போகும்.
அடுத்தவர்களை நம்பி இறங்கிய காரியங்கள் இழுபறி தரும். உறவினர் ஒருவரால் சங்கடம் தோன்றும். பழைய குடும்பப் பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.
பிள்ளைகள் வழியில் அதிக செலவுகள் ஏற்படும். அதிகப்படியான அலைச்சலால் உடல்நிலை பாதிப்படையும். வாழ்க்கைத்துணையின் பணிச்சுமையைக் குறைக்க உதவுவீர்கள்.
குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மகரம்
தைரியம் அதிகரிக்கும். எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும். பிரச்சனைகளை புத்திகூர்மையால் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
சுற்றியுள்ளோர் மத்தியில் உங்கள் கவுரவம் உயரும். குடும்பத்தினர் தங்கள் தேவைகளுக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பர். செலவுகளைச் சமாளிக்கிற அளவிற்கு பணவரவு உண்டு.
பேச்சில் கூடுதல் கவனம் அவசியம். உணவில் ருசிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். பார்வைக் கோளாறால் தலைவலி வரும். பால்ய சிநேகிதர் ஒருவரை சந்திப்பீர்கள்.
வாகனப்பயணம் ஆதாயம் தரும். உறவினர் ஒருவர் உதவி கேட்டு உங்களை நாடி வருவார். பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் ஏற்படும்.
முன்கோபத்தால் உடல்நிலையில் பாதிப்பு இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்களை நல்வழிப்படுத்தும்.
குடும்பப் பெரியவர்களின் பிடிவாதமான செயல்கள் மன வருத்தம் தரும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்
பேச்சுத்திறமையால் எடுத்த செயல்களில் சாதனை உண்டு. பிரச்சனைக்குரிய சூழலில் அடுத்தவர்களை பேசவிடாது சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
இக்கட்டான இடங்களில் நியாயமான கருத்துகளை வெளிப்படுத்துவீர்கள். வாழ்க்கை தரம் உயரும். வீட்டிற்குத் தேவையான புதிய பர்னிச்சர்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
குடும்பத்தில் சலசலப்பான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஒத்துழைக்க மறுப்பர். செலவுகளை சமாளிக்கும் வகையில் பண வரவு இருக்கும்.
மின்சாதனங்களைக் கையாளும்போதும் அதிக எச்சரிக்கை அவசியம். உறவினர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சி தரும்.
பிள்ளைகளின் அறிவுத்திறன் உங்களை வியப்படைய வைக்கும். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் அதிகம் பேசாது அமைதி காப்பது நல்லது.
மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் ஈடுபாடு கொள்வர்.
மீனம்
மனதில் சஞ்சலம் இருக்கும். ஆயினும் காரியத்தில் இறங்கிவிட்டால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுவீர்கள்.
முக்கியமான பணிகளில் முடிவெடுக்க முடியாமல் குழப்பம் ஏற்படும். எதிலும் உங்கள் மனதிற்கு சரியென்று பட்டதை செய்வதால் முழுமையான வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு சீராக இருக்கும். சுப செலவுகள் கூடும். அண்டை வீட்டாரோடு வீண் மனஸ்தாபம் உருவாகும். புதிய வீட்டுக்கு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள்.
உடன்பிறந்தோரிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். உறவினர்கள் மத்தியில் உங்கள் கவுரவம் உயரும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும்.
பொழுதுபோக்கு அம்சங்கள் மன மகிழ்ச்சி தரும். உங்களது நெடுநாளைய விருப்பத்தை வாழ்க்கைத்துணை நிறைவேற்றி வைப்பார்.
குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் பயன்தரும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பதும், கிடைக்கவிருப்பதும் என்ன?
» இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பவை இதோ!
» இந்த வாரம் உங்களுக்கு இதுதான் நடக்கும்
» இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பவை இதோ!
» இந்த வாரம் உங்களுக்கு இதுதான் நடக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum