Top posting users this month
No user |
Similar topics
பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் அரசுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு
Page 1 of 1

பாராளுமன்ற தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பிலும் எந்த முறையின் கீழ் நடத்துவது என்பது குறித்தும் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளமை தற்போது பரகசியமாகியுள்ளது.
அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான ராஜித சேனாரத்ன இவ்விடயம் குறித்து ஒரு நிலைப்பாட்டையும் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மற்றொரு நிலைப்பாட்டையும் தெரிவித்திருக்கின்றனர
நாட்டின் தேர்தல் முறை மாற்றப்பட்ட பின்னரே அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. காரணம் தேர்தல் முறையை மாற்றுவதாக நாங்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். அதனை மீறிச் செல்ல எம்மால் முடியாது.
தேர்தல் முறையை மாற்றினால்தான் அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவு வழங்க முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் திருத்தம் நிறைவேறவேண்டுமானால் சுதந்திரக் கடசியின் ஆதரவு தேவையாகும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு கடந்த வியாழனன்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அத்துடன் தேர்தல் முறையையும் மாற்றவேண்டியுள்ளது. அதன் பின்னரே தேர்தலுக்கு செல்ல முடியும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தச் செய்தியாளர் மாநாட்டில் எடுத்துக்கூறியிருந்தார்.
அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள நிலையில் கடந்த வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கை,
நல்லாட்சி பயணத்துக்கு கிடைக்கப்பெற்ற மக்கள் வரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்வதற்காக 100 நாள் வேலைத்திட்டத்தை தயாரித்தோம்.
இதற்கமைய ஏப்ரல் 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது. கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும். பழைய தேர்தல் முறையான விகிதாசார முறையின் அடிப்படையிலேயே இந்தத் தேர்தல் நடத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு தயாராகிவிட்டது. எமது கட்சியுடன் யானைச் சின்னத்துடன் போட்டியிடக்கூடிய சிறிய கட்சிகளுடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு கட்சிகளுக்கான ஆசனப்பங்கீடு தொடர்பில் ஆராயப்படும். பாராளுமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பொதுச் செயலாளர் கபிர் காசிம், தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் முன்னெடுப்பார்கள் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கருத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவையாகவே அமைந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பொது எதிரணியின் சார்பில் தேர்தல் விஞ்ஞாபனமும் 100 நாள் வேலைத்திட்டமும் வெளியிடப்பட்டிருந்தது.
இதில் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்றும் 17வது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுலுக்கு கொண்டுவந்து சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது எனவும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை மாற்றி அமைப்பது என்றும் உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய நிலையில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலும் தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பிலும் அரசாங்கத்துக்குள் முரண்பட்ட நிலை ஏற்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவந்தால் தான் அரசியலமைப்பு மாற்றத்துக்கு ஒத்துழைக்க முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியோ தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தாது எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமையானது பிரதமரின் கருத்திலிருந்து நன்கு புலனாகின்றது.
கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்டுநாயக்க பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தரங்கு இடம்பெற்றது. 2 தினங்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்றும் அமைச்சர்களின் எண்ணிக்கையை 40ஆக அதிகரித்து அதில் 17 அமைச்சுக்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கவேண்டுமென்றும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
தேர்தல் முறையினை மாற்றும் வரையில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தக்கூடாது என்றும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரையில் தேசிய அரசாங்கத்தை கொண்டு நடத்துவது எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதனை விரும்பவில்லை என்றே தெரிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து முன்கொண்டு செல்வதே சுதந்திரக் கட்சியினரின் எண்ணமாக உள்ளது. இதனையே அமைச்சரவையின் பேச்சாளரும் சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான ராஜித சேனாரத்னவின் கருத்தும் பறைசாற்றுகின்றது.
ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தி புதிதாக மக்களின் ஆணையை பெறுவதற்கே முழுமூச்சாக செயற்பட்டு வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திலிருந்து இது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின பின்னர் ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னர் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கூறுவது போன்று தேர்தல் முறையை மாற்றி ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்றத்தைக் கலைப்பது என்பது சாத்தியமற்றது என்ற நிலைப்பாட்டையே ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுள்ளது.
இதனால்தான் தேர்தல் முறையை மாற்றாது பழைய தேர்தல் முறையின்படி பாராளுமன்றத் தேர்தலை நடத்தி தேசிய அரசாங்கத்தை உருவாக்கலாம் என்பதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடாக இருக்கின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நல்லாட்சி ஒன்றை எதிர்பார்த்தே நாட்டு மக்கள் பொது எதிரணியின் வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். இதனால்தான் புதிய ஆட்சி மலர்ந்திருந்தது.
இந்த நிலையில் கொடுத்த வாக்குறுதிகளை புதிய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியது இன்றியமையாததாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயத்தில் அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் ஏற்படுகின்றமை மக்களின் எதிர்பார்ப்புக்களை வீணடிப்பதாகவே அமையும்.
எனவே, தேர்தல் முறைமை மாற்றமாக இருக்கலாம் அல்லது தேர்தல் எப்போது நடத்தப்படுவது என்ற விடயமாக இருக்கலாம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே புரிந்துணர்வுடன் பேச்சுக்களை நடத்தி நியாயமான தீர்வொன்றுக்கு வரவேண்டியது இன்றியமையாததாகும்.
இதற்கு மாறாக ஒவ்வொரு தரப்பினர் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருவார்களேயானால் அது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவதுடன் நல்லாட்சி மீதான நமபிக்கையையும் மழுங்கடிக்கச் செய்துவிடும்.
இவ்விடயம் தொடர்பில் சகல தரப்பினரும் சிந்தித்து செயலாற்றி மக்களின் நம்பிக்கையை பேண வேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று! நாடளாவிய ரீதியாக வாக்கெடுப்பு
» தேர்தல் வன்முறை தொடர்பில் இதுவரை 611 பேர் கைது!
» தேர்தல் தொடர்பில் இதுவரை 304 முறைப்பாடுகள் - 60 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum