Top posting users this month
No user |
Similar topics
எதிரிகளை திகைக்க வைத்த குடாரப்பு மண்! தியாக நினைவுக் கல்லினை சிறீதரன் எம்.பி உள்ளிட்ட குழுவினர் பார்வை
Page 1 of 1

வடமராட்சி கிழக்கு, குடாரப்பு மண் தமிழர் வரலாற்றில் பெருமை மிக்கது. திருப்பு முனையை தந்தது. போராட்டத்தின் ஒரு பெரும் மைல் கல். பால்ராஜ் எனும் போர் வீரனும் அவர் தம் தமிழ் படையும் தரையிறங்கி எதிரிகள் மீது தாக்குதல் தொடுத்து எதிரிகளை திகைக்க வைத்த மண் என கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க லண்டன் குணா அறக்கட்டளை வடமராட்சி கிழக்கு குடாரப்பு மாணவர்களுக்கு இன்று அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வு குடாரப்பில் வடமாராட்சி கிழக்கு அமைப்பாளர் சூரியகாந் தலைமையில் நடைபெற்றது.
இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், குடாரப்பு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அருள்தாஸ், மாதர் சங்க தலைவி செபஸ்ரின் ஜெசிந்தா, சமூக சேவையாளர் திக்கம் தினேஸ் உட்பட மாணவர்கள், பெற்றார்கள் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றியபோதே வடமாரட்சி கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிரிகளும் பால்ராஜ் எனும் தமிழ் வீரனுக்கு தலைவணங்கிய மண். இந்த மண் அர்ப்பணிப்பால் உலகம் அறியப்பட்டது. இந்த மண்ணால் தமிழர்கள் உலகம் அறியப்பட்டார்கள்.
எனவேதான் இந்த மண்ணில் வாழ்கின்றவர்களுக்கும் பிறக்கின்றவர்களுக்கும் வரலாற்று பெருமை உண்டு. அதனால் அந்த வரலாற்றுப் பெருமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின், இன மொழிப்பற்றுடன் மிகுந்த பொருளாதார, அறிவியல், இராணுவ மதிநுட்ப அறிவுடன் நாம் தேசப்பற்றுள்ள கல்வியை கற்க வேண்டும். சாதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் பா.உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினர் வரலாற்றுப் பெருமை மிக்க குடாரப்பு தரையிறக்க தியாக நினைவு கல்லினையும் பார்வையிட்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எதிரிகளை விலக செய்யும் முத்துக்குமாரசாமி கோவில்
» தமிழக மீனவ குழுவினர் நாளை இலங்கை விஜயம்
» ஜேர்மன் நாட்டு தூதுக் குழுவினர்- கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum