Top posting users this month
No user |
எதிரிகளை விலக செய்யும் முத்துக்குமாரசாமி கோவில்
Page 1 of 1

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது. முருகப்பெருமான் ஆறுமுகம் கொண்டவராக இங்கு காட்சி தருகிறார். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பல்வேறு பலன்களை தரும் ஸ்தலமாக உள்ளது.
சுவேதா நதி (வெள்ளாறு), வங்காள விரிகுடா கடலையட்டி இந்த கோவில் அமைந்திருக்கிறது. முத்துக்குமாரசாமி கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் சத்ருசம்கார பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
மேலும் திருமண தடை நீங்குதல், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்தல், நாகதோஷம் விலகுதல் போன்ற சிறப்பு பலன்கள் இந்த கோவிலில் கிடைக்கிறது. பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இழந்தவர்கள் போன்றோர் முத்துக்குமாரசாமியை வழங்கினால் மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கோவில் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்திரன் இங்கு வழிபட்டு அருள் பெற்றதாகவும், இடும்பன் இங்கு வாகனமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் நவராத்திரி, கந்தசஷ்டி, திருகார்த்திகை, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனிஉத்திரம் சிறப்பாக நடைபெறுகிறது.
கந்தசஷ்டி விழாவின்போது தெய்வானை திருக்கல்யாணமும், தைப்பூச விழாவில் வள்ளி திருக்கல்யாணமும் நடக்கிறது. தைப்பூசத்தன்று முருகன் சுவேதா நதிக்கும், மாசி மகத்தன்று வங்காள விரிகுடா கடலுக்கும் சென்று தீர்த்தவாரி செய்கிறார். இமயமலையில் இருப்பதாக சொல்லப்படும் பாபாஜியின் தந்தை சுவேதநாத அய்யர் இந்த கோவிலில் தான் அர்ச்சகராக பணியாற்றினார்.
இந்த கோவிலில் இருந்து சற்று தூரத்தில் பாபாஜியின் அவதார தல கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள குடவறை கோவில்களில் முத்துக்குமாரசாமி கோவிலும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum