Top posting users this month
No user |
Similar topics
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை: பொன்.செல்வராசா எம்.பி.
Page 1 of 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் உள்ள தளபாட பற்றாக்குறைகள் மற்றும் பூர்த்திசெய்யப்படாத கட்டிடப்பணிகளை புதிய அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்திசெய்துதருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று கல்விக்கோட்டத்துக்குட்பட்ட தாழங்குடா விநாயகர் வித்தியாலயத்தில் இரண்டுமாடிக்கட்டிடத்திறப்பு விழா இன்று நண்பகல் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.மதிசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் விசேட திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் சுமார் 65 இலட்சம் ரூபா செலவில் இந்த இருமாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு வகுப்பறைகள், அதிபர் அலுவலகம் ஆகியன இந்த புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட கல்வி திணைக்கள அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, எதிர்வரும் 13ஆம் திகதி பிரதிக்கல்வி அமைச்சர் இராதாகிருஸ்ணன் மட்டக்களப்பு விஜயம் செய்யவுள்ளதாகவும் அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் பற்றாக்குறைகள் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசாங்கத்திடம் இது தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாண அரசாங்கம் ஆகியவற்றை பயன்படுத்தி தேவைகளை நிறைவுசெய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டக்களப்பில் 75 சிங்களவர்கள் கம நல ஆராய்ச்சியாளர்களாக நியமனம்: பொன்.செல்வராசா கண்டணம்
» ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும்!- பொன்.செல்வராசா
» சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி எவராலும் தலைவராக வரமுடியாது!– பொன்.செல்வராசா பா.உ.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum