Top posting users this month
No user |
சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி எவராலும் தலைவராக வரமுடியாது!– பொன்.செல்வராசா பா.உ.
Page 1 of 1

சிறுபான்மை மக்களின் வாக்குகளின்றி, அவர்களின் ஆதரவின்றி, இந்நாட்டில் எவராலும் தலைவராக வந்துவிட முடியாது என்பதை இந்தத் தேர்தல் எடுத்துக் காட்டியிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது கோரிக்கை பிந்தியதாக இருந்தாலும் அதனை ஏற்று தமிழ் பேசும் மக்கள் தமது வாக்குகளை கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அள்ளி வழங்கியிருக்கின்றார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு கிளையின் சார்பில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி.
இத்தேர்தல் தமிழ் பேசும் மக்கள் பெருந்தொகையில் பங்குகொண்ட ஒரு தேர்தலாகும். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இந்தத் தேர்தலில் தான் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டார்கள்.
வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். எமது மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை வேண்டியிருந்தார்கள். அதன் காரணமாகவே தமது வாக்குகளை அள்ளி வழங்கியிருக்கின்றார்கள்.
சிலர் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரியிருந்த நிலையிலும் அவற்றினை புறக்கணித்து வாக்குகளை சாரைசாரையாக வந்து அளித்துள்ளனர்.
நிச்சயமாக ஒன்றைமட்டும் கூறுகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழ் மக்களை கோரியிருந்தால் நிச்சயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது.
மூன்றாவது முறையாகவும் மகிந்த ராஜபக்ச அவர்களே வெற்றி பெற்றிருப்பார். அந்தளவிற்கு சிறுபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஒருவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் விளங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த அவர்கள் எமக்கு தமிழர்களின் வாக்குகளும் முஸ்லிம்களின் வாக்குகளும் தேவையில்லை என்ற கருத்துப்பட ஒருதடவை பேசியிருக்கின்றார். ஆனால் இந்த தடைவ இந்த தேர்தலை பார்க்கும்போது சிறுபான்மை மக்களின் வாக்குகளின்றி அவர்களின் அமோக வரவேற்பின்றி இந்நாட்டில் எவராலும் தலைவராக வந்துவிட முடியாது என்பதை இந்தத் தேர்தல் எடுத்துக்காட்டியிருக்கின்றது.
சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று கூறிய ஒரு தலைவரை வீட்டிற்கு அனுப்பிய பெருமை இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு கிடைத்துள்ளது.
புதிய ஜனாதிபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். என அவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum