Top posting users this month
No user |
Similar topics
பெக்கரின் கசினோ திட்டத்தினால் இலங்கைக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை: பிரதமர்
Page 1 of 1

அவுஸ்திரேலியாவை சேர்ந்த கசினோ வர்த்தகரான ஜேம்ஸ் பெக்கரினால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தினால் எவ்வித பயனும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்களின் போது, ஜேம்ஸ் பெக்கரின் க்ரவுன் நிறுவனம் 450 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கசினோ திட்டத்தினை ஆரம்பிக்கவிருந்தது.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி தேர்தலின் போது பிரச்சார மேடைகளில் மைத்திரிபால சிறிசேன குறித்த திட்டத்தை நிறுத்துவதாக உறுதியளித்திருந்தார்.
சூதாட்ட வருவாய் வரி அறவிடாமல் கசினோவிற்கு அனுமதி வழங்கும் உலகத்தின் ஒரே நாடாக இலங்கை திகழ்ந்ததாகவும் சர்வமதத் தலைவர்களிடம் இருந்து கசினோ திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதாகவும் பிரதமர் அவுஸ்திரேலிய ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இடைகால வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது பிரதமர் கசினோ திட்டத்தை நிறுத்துவதாகவும் அறிவித்திருந்தார்.
இவ்வாறான எதிர்ப்புகளையும் மீறி ஜேம்ஸ் பெக்கர் தனது திட்டத்தை செயற்படுத்த முனைந்ததாகவும் தனது நண்பரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்து ஆட்சியில் இருப்பார் என நம்பியதாகவும் அதனால் சில அரசியல் விளையாட்டுகள் இடம்பெற்றன. எனினும் அது தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வணிக நிறுவனங்கள் சில ஊழலுடன் தொடர்புடையவை, முற்றிலும் ஒரு முதலாளித்துவ அமைப்பு சார்ந்தவை, உண்மையான போட்டி இருக்க வேண்டுமே தவிர ஊழல் என்பது இருக்க முடியாது என்று கூறியுள்ள பிரதமர் பெக்கருக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்பது தொடர்பில் தம்மிடம் சில கதைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெக்கர் ஊழல் புரிந்துள்ளாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தாங்கள் புதிய முதலீட்டு ஆட்சி முறையை உருவாக்கி உள்ளதாகவும் சிறந்த பொருளாதாரத்திற்கு வெளிநாட்டு முதலீட்டை நேரடியாக ஊக்குவிப்பதாகவும் உற்பத்தி, வேளாண்மை மற்றும் சேவைத்துறைகளில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடலோரங்களில் உல்லாச விடுதிகளை நிர்மாணிக்க இடமளிக்கப் போவதில்லை: பிரதமர்
» இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும்: பிரதமர் மோடி
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum