Top posting users this month
No user |
Similar topics
திருப்பி அனுப்பப்படும் புகலிட கோரிக்கையாளர்கள்: மகிந்த அரசின் கொள்கைகளை பின்பற்றும் மைத்திரி
Page 1 of 1

வெளிநாடுகளில் புகலிடம் கோர முயற்சிகளை மேற்கொண்டு திருப்பி அனுப்படுபவர்கள் தொடர்பில் கடந்தகால அரசாங்க நடைமுறைப்படுத்திய கொள்கைகளையே தற்போதைய அரசாங்கமும் பின்பற்றும்.
அவுஸ்திரேலியாவிலிருந்து நேற்றைய தினம் புகலிட கோரிக்கையாளர்கள் நால்வர் நாடு திரும்பியதையடுத்தே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு திரும்பும் புகலிட கோரிக்கையாளர்கள் வழமைபோன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு திருப்பியனுப்பபடுபவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் அல்லது துறைமுகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுவர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு குறித்த புகலிடகோரிக்கையாளர்கள் மீது சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறிய குற்றச்சாட்டு சுமத்தப்படும்.
அத்துடன் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து கொள்கை மாற்றமொன்றை மேற்கொள்ளும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கில்லாத பட்சத்தில் இதுகுறித்து ஆராயவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நேற்றைய தினம் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ள நால்வரையும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடுக்கடலில் வைத்து விசாரணை செய்துவிட்டு இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தமையும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடுக்கடலில் வைத்து புகலிடக்கோரிக்கையாளர்களை விசாரணை செய்யும் நடைமுறை குறித்து அவுஸ்திரேலியாவிலும், சர்வதேச அளவிலும் கடந்த காலங்களில் பலத்த கண்டனங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த நடவடிக்கை சரியானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், இந்நடைமுறைக்கு யு.என்.எச்.சீ.ஆர் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், இவ்விசாரணை தரையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும் புகலிடக்கோரிக்கையாளர்கள் விளங்கிக் கொள்ள கூடியதாகவும், தங்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்தகூடியதாகவும் இந்நடைமுறை அமையவேண்டும் என அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை புகலிடக்கோரிக்கையாளர்களை நடுக்கடலில் விசாரணை செய்வது சர்வதேச சட்டங்களுக்கு முரணாணது எனவும்,
புகலிடக் கோரிக்கையாளர்கள் கேள்விகள் கேட்பதற்கும், சட்டத்தரணிகளை வைத்து வாதாடுவதற்கும் உரிமையுள்ளது எனவும் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் பாலா விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்த அரசின் கொள்கைகளை முன்னெடுக்கும் தேசிய அரசாங்கம்! வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு
» மகிந்த அரசின் ஊழல் விசாரணைகளை கண்காணிக்கும் பொறுப்பு சந்திரிக்காவிடம்!
» மகிந்த ஆதரவாளர்களை களையெடுக்கும் மைத்திரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum