Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சாட்சியளித்தவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் சரியான முடிவை செய்யும்!- பிரி. பிரதி உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

Go down

சாட்சியளித்தவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் சரியான முடிவை செய்யும்!- பிரி. பிரதி உயர்ஸ்தானிகர் நம்பிக்கை! Empty சாட்சியளித்தவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் சரியான முடிவை செய்யும்!- பிரி. பிரதி உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

Post by oviya Fri Feb 20, 2015 1:18 pm

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் மார்ச் மாத கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் தாக்கல் செய்யப்படவிருந்த அறிக்கையின் வெளிப்பாடுகள் பிற்போடப்பட்டது சாட்சி அளித்தவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் சரியான முடிவை கொண்டு வர உதவும் என்று பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டேவிஸ் தெரிவிக்கின்றார்.

விசாரணைக்கு முகம் கொடுத்து தகவலை வழங்கியவர்கள் தாமதமான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாகவே இருப்பர் அதுவே சரியானதாகும்.

புதிய அரசு ஐக்கிய நாடுகள் சபை கூறுவது போல் உள்நாட்டு பொறுப்பு கூறல் நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பு அணுகுமுறையில் மாற்றத்தை இலங்கை அரசு செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளது.

இந்த முடிவு நீண்டகால தேசிய பிரச்சினை சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் தீர்வு நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று லாரா டேவிஸ் தனது தனிப்பட்ட வலைப்பகுதியில் ” வன்னியில் ஒரு பயணம் ” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை அரசு தனக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் இணைந்து செயற்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரித்தானியா முன்னர் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் அறிக்கை கட்டாயம் பகிரங்கப்படுத்த வேண்டும் என பிரித்தானியா வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே ஆறுமாத கால தாமதத்தின் போர் குற்றச்சாட்டு அறிக்கையை பிரித்தானியா ஏற்றுக் கொண்டதாகவும் இதை இலங்கை அரசு தக்க முறையில் பயன்படுத்தி நாட்டின் சகல மக்களின் பிரகாசத்தையும் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் எனவும் வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோஸ்வரி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum