Top posting users this month
No user |
Similar topics
யுத்தத்தின் காயங்களை ஆற்றுவதில் உண்மையை கண்டறிதல் முக்கியம்!- பிரிட்டன் உயர்ஸ்தானிகர்
Page 1 of 1

யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் செயற்பாட்டில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியும் செயற்பாடு முக்கியமானதாகும் என்று இலங்கைக்கான பிரிட்டனின் புதிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டுகின்றது. மேலும் உள்ளக நம்பகரமான விசாரணை செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் எம்மிடம் உதவுமாறு கோரிக்கை விடுக்குமானால் அதனை பரிசீலிக்க பிரிட்டன் தயாராக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
அந்தவகையில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தெரிவு தற்போது இடம்பெற்றுள்ளது. அவரின் வருகையை நாங்கள் வரவேற்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
செவ்வியின் போது இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் வழங்கியுள்ள பதில்களும் வருமாறு
கேள்வி: பிரிட்டனில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கம் இலங்கையுடனான சிறந்த இருதரப்பு உறவை முன்னெடுக்க எவ்வாறான அணுகுமுறையை நோக்கி நகரும்?
பதில்: பழமைவாத கட்சியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை விவகாரம் குறித்த முக்கிய விடயத்தை உள்ளடக்கியிருந்தது. தமது கட்சி அரசாங்கத்தை நடத்த மக்கள் அனுமதி அளித்தால் தாம் இலங்கை விடயத்தில் எவ்வாறு செயற்படுவோம் என்பதனையே இவ்வாறு பழமைவாத கட்சி கூறியிருந்தது. அந்தவகையில் இலங்கையின் மனித உரிமை விவகாரம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு பிரிட்டன் தொடர்ந்து உதவும்.
கேள்வி: பொருளாதார விவகாரத்தில்?
பதில்: இலங்கையுடனான பொருளாதார ஈடுபாடு தொடர்பாகவும் பழமைவாத கட்சியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் முதலீடுகளை ஊக்குவிப்பது இதில் காணப்படுகின்ற முதன்மை விடயமாகும். எனவே பொருளாதார ரீதியிலும் இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட எதிர்பார்க்கின்றோம்.
கேள்வி: இலங்கையிலும் தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் பதவியேற்று வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. பிரிட்டன் இந்த மாற்றத்தை எவ்வாறு நோக்குகின்றது?
பதில்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பிரிட்டன் மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு குழப்பமடைந்து காணப்பட்டது. அந்தவகையில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தெரிவு தற்போது இடம்பெற்றுள்ளது.
மக்களினால் ஜனநாயக ரீதியில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரின் வருகையை நாங்கள் வரவேற்கின்றோம். அந்தவகையில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எமக்கு பல சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளன.
குறிப்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த சிறந்த சந்தர்ப்பம் தற்போது உள்ளது. விசேடமாக கல்வித்துறையில் சிறந்த முறையில் பணியாற்ற முடியும். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பிரிட்டன் மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு ஏன் குழப்பமடைந்து காணப்பட்டது?
பதில்: மனித உரிமை விவகாரம் குறித்த எமது விதிமுறை சார்ந்த உறுதியான நிலைப்பாடு இந்த நிலைக்கு முக்கிய காரணம். அது மட்டுமன்றி உள்நாட்டு யுத்தத்தின் இறுதிப் பகுதியில் என்ன நடந்தது என்பது தொடர்பாக கண்டறிய நம்பகரமான சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதனை பிரிட்டன் வலியுறுத்தியது.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்திருந்தார். பிரிட்டன் பிரதமர் யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருந்தார். அதன்போது டேவிட் கமரோன் இலங்கை விவகாரம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக வெளியிட்டிருந்தார். அதாவது சர்வதேச சமூகத்தின் அவதானத்தின் முக்கியம் மற்றும் நம்பகரமான விசாரணை ஒன்றின் அவசியம் குறித்தும் டேவிட் கமரோன் அப்போது வலியுறுத்தியிருந்தார்.
கேள்வி: தற்போதைய புதிய அரசாங்கம் நல்லிணக்கத்தை அடைவதற்காக முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைகின்றீர்களா?
பதில்: அரசாங்கம் மேற்கொண்டுள்ள குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளன. மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கில் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமையை காண முடிகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கில் இவ்வாறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. முழு இலங்கை மக்களும் பாதிக்கப்பட்டனர். அந்தவகையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கேள்வி: கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்தீர்கள்? மக்களுடன் உரையாடினீர்களா? மக்கள் உங்களிடம் என்ன கூறினர்?
பதில்: நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து உரையாடியிருந்தேன். யாழ்ப்பாண மக்கள் என்னுடன் பல விடயங்களை உரையாடினர். நான் சந்தித்த மக்கள் நல்லெண்ணத்தையே வெளிப்படுத்தும் வகையிலேயே என்னுடன் உரையாடினர். எனினும் அவர்களிடம் உள்ள முக்கிய கவலைகள் மற்றும் கரிசனைகள் குறித்தும் மக்கள் என்னுடன் உரையாடினர்.
கேள்வி: நல்லிணக்க விடயத்தில் அந்த மக்களின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்தது?
பதில்: நல்லிணக்க விடயத்தில் மேலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று அந்த மக்கள் என்னிடம் கூறினர். இடம்பெயர்ந்த நிலையில் தமது இடங்களில் மீள்குடியேறிக்கொண்டிருந்த மக்களை நான் சந்தித்தேன். எனினும் அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதில் சில நடைமுறை சிக்கல்களும் காணப்பட்டன. உதாரணமாக நான் சென்ற ஒரு மீள்குடியேற்ற பிரதேசத்தில் மின்சார வசதி இல்லாத பிரச்சினை காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு சில சிக்கல்கள் காணப்படுகின்றன. இன்னும் சவால்கள் உள்ளன என்பதனை அவதானிக்க முடிந்தது.
கேள்வி: 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தபோதும் தமிழ் பேசும் மக்களும் இதுவரை நியாயமான மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை பெற முடியவில்லை. இது குறித்து பிரிட்டனின் நிலைப்பாடு என்ன?
பதில்: இலங்கை எமது பழைய நெருங்கிய நட்பு நாடு. எனவே இலங்கையின் உள் விடயத்தில் பிரிட்டன் தலையீடுகளை மேற்கொள்ளாது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் சிறந்த இருதரப்பு நட்புறவு காணப்படுகின்றது. விளையாட்டு, கல்வி, வரலாறு, காலநிலை மாற்றம் வர்த்தகம், முதலீடு போன்றவற்றில் இலங்கையுடன் பிரிட்டனுக்கு சிறந்த தொடர்பு காணப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வை பொறுத்தவரை அரசியல் தீர்வு விடயமானது உள்நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இலங்கையினாலேயே உருவாக்கிக் கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இலங்கையினால் அரசியல் தீர்வு உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பரஸ்பர புரிந்துணர்வு நல்லிணக்கம் மற்றும் கௌரவம் ஒத்துழைப்பு என்பனவற்றின் அடிப்படையில் இந்த விடயம் இடம்பெறவேண்டும்.
கேள்வி: புதிய அரசாங்கம் அரசியலமைப்பின் 19 வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதன்மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
பதில்: நான் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டு இலங்கை வந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எனது நியமனக் கடிதத்தை அண்மையில் பெற்றுக்கொண்டேன். அதாவது பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நான் ஜனாதிபதியிடம் எனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டேன். அப்போது இந்த அரசியலமைப்பு திருத்த விடயத்தை அடைந்தமைக்காக நான் ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். இந்த செயற்பாட்டை நாங்கள் வரவேற்கின்றோம். சிறந்த அரசியல் தலைமைத்துவம் வெளிக்காட்டப்பட்டுள்ளது.
கேள்வி: இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய நாடுகளில் பிரிட்டன் பிரதானமானதாகும். ஆனால் கடந்த மார்ச் மாதம் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த குறித்த விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டு செப்டெம்பரில் முன்வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏன் பிரிட்டன் இந்த பிரேரணைக்கு அனுசரணை வழங்கியது?
பதில்: பிரிட்டன் மட்டுமல்ல. ஐந்து நாடுகள் இலங்கை குறித்த பிரேரணைக்கு அனுசரணை வழங்கியது. யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ள நம்பகரமான சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று நாங்கள் ஆரம்பத்தில் வலியுறுத்தினோம். இதே விடயத்தை இலங்கைக்கு 2013 ஆம் ஆண்டு வருகை தந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோனும் வலியுறுத்தியிருந்தார். இலங்கை மற்றும் இலங்கை மக்களுக்காகவே இதனை வலியுறுத்தினோம்.
இதனாலேயே இவ்வாறான முடிவை எடுக்கவேண்டியேற்பட்டது. வடக்கு அயர்லாந்து விடயத்தில் பிரிட்டனுக்கு மிகப்பெரிய உள்நாட்டு மோதல் காணப்பட்டது. எனவே இது எந்தளவு தூரம் சிக்கலானது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். மோதலில் இருந்து சமாதானத்துக்கு வருவது எவ்வாறு கடினமானது என்றும் எங்களுக்கு தெரியும். எனினும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்று மக்கள் அறிந்துகொள்ளவேண்டும். அது முக்கியமாகும். அதாவது காயங்களை ஆற்றும் செயற்பாட்டில் இந்த உண்மையை கண்டறியும் செயற்பாடு முக்கியமானதாகும்.
கேள்வி: கடந்த தேர்தலில் தோல்வியடைந்த தரப்பு மேற்கு நாடுகள் இந்த செயற்பாட்டில் பாரிய பங்களிப்பை செலுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தது. இந்த மேற்கு நாடுகள் என்று வரும்போது பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் முக்கியமாக அவதானத்துக்கு வருகின்றனவே?
பதில்: என்ன அடிப்படையில் இந்த தரப்பினர் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் எனக்கு தெரியவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்தும் வகையிலான எந்தவொரு அழுத்தத்தையும் பிரிட்டன் மேற்கொண்டிருக்கவில்லை என்பதனை நான் உங்களுக்கு உறுதியாக கூற முடியும். ஜனநாயக ரீதியில் மக்கள் தீர்மானம் எடுக்கின்றனர். இதுதான் ஜனநாயகம்.
கேள்வி: இலங்கை குறித்த விசாரணை அறிக்கை ஜெனிவாவில் உள்ளது. செப்டெம்பர் மாதம் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையின் புதிய அரசாங்கம் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதாக கூறியுள்ளது. இதற்கு பிரிட்டன் உதவுமா? அல்லது செயற்பாட்டை மதிப்பிடுமா?
பதில்: உள்ளக விசாரணை செயற்பாட்டில் இலங்கையே எவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பது என்று தீர்மானிக்கவேண்டும். இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டியுள்ளது. மேலும் உள்ளக நம்பகரமான விசாரணை செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் எம்மிடம் உதவுமாறு கோரிக்கை விடுக்குமானால் அதனை பரிசீலிக்க தயாராக இருக்கின்றோம்.
கேள்வி: இலங்கையின் எதிர்காலத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: இலங்கையின் எதிர்கால விடயத்தில் நான் நல்லெண்ணத்துடன் இருக்கின்றேன். இந்த தீவு முன்னேற்றமடையும். நான் இரண்டு மாதங்களாக இங்கு இருக்கின்றேன். இந்த நாட்டு மக்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் அணுகுமுறை செயற்பாடுகள் என்பனவற்றினால் நான் கவரப்பட்டுள்ளேன். சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்கலாம். பல திறமைகளும் இயலுமைகளும் இங்கு காணப்படுகின்றன.
கேள்வி: பிரிட்டன் பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் எண்ணத்தில் உள்ளாரா?
பதில்: உடனடியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் எண்ணம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோனுக்கு இல்லை. ஆனால் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதில் அவர் நெருக்கமான அக்கறையுடன் இருக்கின்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போலி வீசாவில் பிரிட்டன் செல்ல முயற்சித்த மூவர் கைது
» வரலாற்றுப் பதிவுகள் உண்மையை உரைப்பவையாக இருக்க வேண்டும்!
» உண்மையை கண்டறியும் குழு மீதான விசாரணை சட்டமா அதிபர் கைகளில் தங்கியுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum