Top posting users this month
No user |
Similar topics
பிரதேச செயலக சேவைகள் ஒழுங்கு: உள்விவகார அமைச்சு நடவடிக்கை
Page 1 of 1

பிரதேச நிர்வாகத்தை ஒழுங்கமைக்க நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதேச செயலக கட்டிடங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கவும் புதிய பிரதேச செயலக கட்டிட நிர்மாணப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்விவகார மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்வாகச் சேவைகளை ஒழுங்குப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய 48 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருதங்கேணி மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகங்கள் அண்மையில் திறக்கப்பட்டதுடன், 194 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை பிரதேச செயலகம் இம்மாதம் இறுதிக்குள் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜாஎல மற்றும் வத்தளை பிரதேச செயலகங்களை நிர்மாணிக்க 167 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் மக்கள் இலகுவாக சேவையை பெற்று கொள்ள முடியும் என உள்விவகார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அரச அலுவலகங்களிற்கு செல்லும் மக்களுக்கு ஒரு ஒழுங்கு முறையில் சேவை வழங்கப்படவுள்ளதுடன், கிராம சேவகர்கள் உட்பட கிராமிய மட்டத்தில் பணிபுரியும் அரச ஊழியர்களின் சேவைகளையும் ஒழுங்கமைப்புடன் வழங்குவதற்கும் திட்டங்கள் வகுக்கப்படுவதாக உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள் கறுப்புப்பட்டி போராட்டத்தில்
» கண்டாவளை பிரதேச மக்களின் காணிகளுக்கு விமோசனம்: காணி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை
» தேர்தல் செயலக கணனிகளுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum