Top posting users this month
No user |
Similar topics
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி
Page 1 of 1

அனைத்து இந்து மக்களாலும் புனித நாளாக கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது
மகா சிவராத்திரி விழாக் கொண்டாட்டத்தில் உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இணைந்து கொள்ளும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இவ்விழா, இப்பிரபஞ்சத்தின் மூல உருவாக்கத்தையும் இரட்சிப்பையும் குறிக்கும் வகையில் சிவபெருமான் சிவ தாண்டவம் அல்லது அண்ட நடனமாடியதை நினைவுகூற அனுஷ்டிக்கப்படுவதாக நம்பப்படுவதால் விசேட முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
இப்பண்டிகையுடன் தொடர்புடைய பல்வேறு கிரியைகளில் விரதம் அனுஷ்டித்தல், கோயிலில் இரவில் விழித்திருத்தல், தானம் வழங்குதல், விளக்கேற்றல், சிவபெருமானைப் புகழ்ந்து தேவாரம் பாடுதல், போன்றவையும் அடங்குகின்றன.
இப்பண்டிகையின் முக்கிய அம்சமான விளக்கேற்றும் நிகழ்வு அறிவு மற்றும் புரிந்துணர்வின் ஒளியில் அறியாமை இருளை அகற்றி ஞானத்தைத் தேடும் மானிட சமூகத்தின் உறுதியான முயற்சிகளை அடையாளப்படுத்துகிறது.
மேலும் இது சமூகத்தில் உள்ள எல்லா வேறுபாடுகளையும் கடந்து மக்கள் மத்தியில் ஐக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்குமான தேடலைக் குறித்து நிற்கிறது.
இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை வாழ் இந்துக்கள், இப்பண்டிகையின் ஆன்மீக உணர்வுடன் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான அவர்களது தேடலில் மேலும் பலத்தைப் பெற்றுக்கொள்வர்.
இந்த மகாசிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புகள் நிறைவேற இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது நல்லாசிகள் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை
» அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி
» சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய ரிஷப யோகி அருளிய சிவகவசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum