Top posting users this month
No user |
Similar topics
சனி பிடித்து விட்டதா? இன்று போய் நாளை வா!
Page 1 of 1

சனி பகவான் பிடித்தால், வாழ்வில் ஏராளமான கஷ்டங்களை சந்திக்க வேண்டிவரும்.
சிவபெருமானையே பிடித்த சனிபகவான் அவரை திருஓடு ஏந்த விட்டார் என்று புராணம் கூறுகிறது.
ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். இதனை அறிந்த விநாயகர், தன் முதுகில் "நாளை வா' என்ற வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு "முதுகைப் பார்' என்கிறார்.
அவர் முதுகில் "நாளை வா' என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு, அதன்படி மறுநாள் வந்தார் சனி பகவான். மறுநாளும் அந்த வாசகத்தைப் படித்துவிட்டு திரும்பிச் சென்றார்.
இதுவே தொடர்கதையாக, அன்று முதல் இன்று வரை விநாயகரை சனியால் பிடிக்க முடியவில்லை என்று புராணம் கூறுகிறது.
உயரமான சனிபகவான்
உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் திருவுருவம் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த சனீஸ்வரரை தரிசிப்பதற்கு முன், நம் பார்வைக்குத் தெரிபவர் மகாகணபதி ஆவார். சுமார் ஐம்பத்து நான்கு அடி உயரமுள்ள இவரது முதுகுப் பகுதியைத்தான் நாம் முதலில் தரிசிக்கிறோம்.
இந்த விநாயகரின் முதுகில் "நாளை வா' என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
இந்த மகாகணபதி பலவித அரிய மூலிகைச் சாற்றினைக் கொண்டு, விசேஷமாகப் பதப்படுத்தப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்டவர்.
இந்த கணபதியின் எதிரேதான் உலகிலேயே மிக உயரமான சனீஸ்வர பகவான் இருபத்தேழு அடி உயரத்தில் மிக கம்பீரமாக காணப்படுகிறார்.
நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்.இவரது,மேல் வலது கரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார்.
இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களையும் நிவர்த்தி செய்வார் என்று சொல்கிறார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போய் வா மகளே போய் வா! ஜூலை 20 சாரதா தேவியார் நினைவு நாள்
» நாளை பிறந்து இன்று வந்தவள்
» தமிழகக் கல்வி அன்று இன்று நாளை
» நாளை பிறந்து இன்று வந்தவள்
» தமிழகக் கல்வி அன்று இன்று நாளை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum