Top posting users this month
No user |
போய் வா மகளே போய் வா! ஜூலை 20 சாரதா தேவியார் நினைவு நாள்
Page 1 of 1
போய் வா மகளே போய் வா! ஜூலை 20 சாரதா தேவியார் நினைவு நாள்
போய் வா மகளே போய் வா! ஜூலை 20 சாரதா தேவியார் நினைவு நாள்
மங்கலமாய் வழியனுப்புகிறார் சாரதாதேவியார்
* ஒருவனிடம் நம்பிக்கை இருக்குமானால் அவன் தன் குறிக்கோளை அடைந்த மாதிரி தான்.
* இறைவன் நம்முடையவன். கடவளுக்கும் நமக்கும் உள்ள இந்த உறவு காலம் காலமாகத் தொடர்ந்து வருவது. இறைவன்
அனைவருக்கும் சொந்தமானவன். இறைவனிடம் நாம் கொண்ட அன்பின் ஆழத்தைப் பொறுத்தே நாம் இறைவனை அறிகிறோம்.
* சாதிக்க முடியாததையும் பக்தியின் மூலமாக சாதிக்க முடியும். இறைவன் தனக்கே சொந்தம் என்று கருதி, ஒருவன் இறைவனை அழைப்பானானால் அது இறைவ னுடைய கருணையால் விளைந்ததாகும்.
* பிராத்தனை செய்யும் பழக்கமுள்ளவர்கள் எளிதாக துன்பத்தில் இருந்து விடுபடுகின்றனர்.
அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் ஏற்படும் இன்னல்களால் பாதிக்கப்படாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
* பெரிய காயம் ஏற்பட வேண்டும் என்று உனக்கு விதி இருக்குமானால், ஊசி குத்துவது போன்ற சிறிய காயமாவது ஏற்பட்டே தீரும்.
* மனைவி மக்களுடன் ஒருவன் இந்த <உலகில் மகிழ்ச்சியாக இருப்பதென்பது சாத்தியமே ஆகாது.
தி பிறரது தவறைப் பொறுப்பதை விட உலகில் மேலான செயல் வேறு ஏதுமில்லை. இந்த உடல் ரத்தத்தாலும், மாமிசத்தாலும் ஆனது. சில சமயங்களில் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது தவறு நடந்து விடுகிறது. அந்த தவறைப் பொறுத்துக் கொள்ளலாமே!
* யாருக்கு இதுவே கடைசிப்பிறவியாக இருக்கிறதோ, அவர்களே முந்தைய பிறவிகளில் செய்த செயல்களின் பலனை, குறிப்பாக அதிக துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
* கணக்கு வழக்கு பார்க்காமலும், எதைக் கேட்டாலும் கொடுத்து விடும் குழந்தையைப் போலவும் பிறருக்கு உதவுங்கள். தி பணம் மனத்தை கறைப்படுத்துகிறது. இளமையில் பணத்தாசையை வளர்த்துக் கொண்டு, முதுமையில் விட்டுவிடலாம் என நினைப்பது என்பது இயலாத காரியம். துன்பங்களுக்கு மூலகாரணம் பணம் தான். அது உங்கள் மனதை வேறு ஆசைகளிலும் இழுத்துச் சென்றுவிடும். கவனமாய் இருங்கள்.
* பெண்கள் கோபத்திற்கு ஆளாதல் கூடாது. பொறுமையைக் கடைப்பிடித்து பழக வேண்டும். பொறுமையை விடச் சிறந்த பண்பு கிடையாது. தி நம் வீட்டுக்கு வருபவர்களை "போய் வாருங்கள்' "போய் வா' என்று சொல்ல வேண்டும். இது ஒரு மங்கலச் சொல்லாகும். "போ' என்ற அமங்கல வார்த்தையை எக்காரணம் கொண்டும் பயன் படுத்தாதீர்கள்.
* உண்மையைக் கூட முரட்டுத்தனமாகப் பேசக்கூடாது. முரட்டுத்தனமாகப் பேசுவதால் உன் இயல்பும் இனிமையற்றதாக ஆகி விடுகிறது. வாக்குக்கட்டுப்பாடும், இனிமையும் உன்னிடமிருந்து விடை பெற்று விடுகிறது.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum