Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த ஆட்சியில், கொழும்பில் 13 பேர் காணாமல் போயினர்: மேல் மாகாண உறுப்பினர்
Page 1 of 1

கொழும்பு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது 13 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அது குறித்து உரிய விசாரணைகளை நடத்துமாறு கோரி மேல் மாகாண சபை உறுப்பினர் சுசில் கிந்தல்பிட்டிய புலனாய்வுப் பிரிவில் இன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சம்பந்தப்படுத்தி வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்த சம்பவங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் கொழும்பு மாவட்டத்தில் வாழும் பல குடும்பங்களின் உறுப்பினர்கள் தன்னை சந்தித்து தமது துயரங்களை வெளிப்படுத்தியதாகவும் தமது உறவினர்கள் வெள்ளை வான் அல்லது ஏனைய முறைகளில் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறியதாகவும் கிந்தல்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் சுசில் கிந்தல்பிட்டிய, கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் 13 பேரின் பட்டியல் ஒன்றையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கையளித்துள்ளார்.
கஸ்தூரி ஆராச்சிகே அந்தனி, மொஹமட் டிலான், ரஜீவ் நாகநாதன்., விஸ்வநாதன் பிரதீப், மொஹமட் சாஜிக், ராமலிங்கம் திலகேஸ்வரன். ஜனக்க பிரபாத் தொடம்பாகே கமகே, எம்.ஏ. பிரதீப் கிறிஸாந்தன, கெலும் நிஷாந்த பீட்டர், கயான் பிரியசந்த, எம்.எஸ்.மொஹமட் பாருக், சமிந்த அனுர ஜயலத், ரவிந்திர உதயசாந்த ( இவர் கடத்திச் செல்ல முயற்சிக்கப்பட்டவர்) ஆகியோரின் பெயர்களையே கிந்தல்பிட்டிய வழங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, கடந்த ஜனவரி 17ம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.
இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், வெள்ளை கலாசாரத்தின் ஆசிரியர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என குறிப்பிட்டிருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாக்குகளை இழுக்கும் காந்தம் போன்றவர் மஹிந்த!- மேல் மாகாண உறுப்பினர் சமன்மலீ
» மேல் மாகாண முதலமைச்சரின் பதவி பறி போகுமா?
» ஐ.தே.கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் காவல்துறையினரிடம் சரண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum