Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


என் பெயரில் கோவிலா? பிரதமர் மோடி வேதனை

Go down

என் பெயரில் கோவிலா? பிரதமர் மோடி வேதனை Empty என் பெயரில் கோவிலா? பிரதமர் மோடி வேதனை

Post by oviya Thu Feb 12, 2015 1:39 pm

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனக்கு கோவில் கட்டி சிலை வைத்துள்ளதை அறிந்த பிரதமர் மோடி, தனது வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள ராஜ்கோட் கிராமத்தில் மோடியின் படத்தை வைத்து அப்பகுதியினர் வழிபாடு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் மாபெரும் வெற்றி பெற்று பிரதமரானதும், அங்கே கோவில் கட்டுமானப் பணிகளை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் தற்போது கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில், ஒடிசாவை சேர்ந்த சிற்பக் கலைஞர் ஒருவர் உருவாக்கிய மோடியின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் 15ம் திகதி மத்திய வேளாண்மை துறை இணை அமைச்சர் மோகன்பாய் கல்யான்ஜிபாய் குண்டாரியா, முறைப்படி இந்த கோவிலை திறந்து வைக்க உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ராஜ்கோட் கிராம மக்கள் கடந்த சில நாட்களாகவே காலை, மாலை என இருவேளையும் இங்கு பூஜைகளை செய்ய தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து மோடி தனது ட்விட்டரில், எனக்கு கோவில் அமைத்துள்ளது பற்றி செய்தியை கேள்விப்பட்டேன். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இது நமது கலாசாரத்திற்கு எதிரானது.

இதுபோல் கோவில் கட்டுவது நமது கலாசாரத்தை அவமதிப்பது ஆகும். மேலும் எனக்கு கோவில் கட்டி இருப்பது மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

மேலும் உங்களுக்கு வசதியும், நேரமும் இருந்தால் 'க்ளீன் இந்தியா' திட்டத்தை செயல்படுத்த வாருங்கள் என்றும் கோவில் கட்டுவதை இனியும் செய்யாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum