Top posting users this month
No user |
Similar topics
அரசியல் செயற்பாடுகள் பயங்கரவாத செயல் அல்ல: சரத் பொன்சேகா
Page 1 of 1

பயங்கரவாதத்தை தோற்கடித்து இலங்கை பெற்ற வெற்றியை அழிக்க எந்த தரப்புக்கும் இடமளிக்க போவதில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியல் பிரச்சினைகள் இருந்த போதிலும் நாட்டிற்குள் எந்த பயங்கரவாத அச்சமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இருக்கும் வரையில் பெறப்பட்ட சுதந்திரத்தை அழிக்க இடமளிக்க போவதில்லை.
பொய்களை கூறி மக்களை ஏமாற்றவும் போவதில்லை. தற்போது பயங்கரவாத அச்சம் இல்லை. பல்வேறு அரசியல் பிரச்சினைகள் இருக்கலாம். வடக்கி்ல் உள்ள அரசியல்வாதிகள் அவர்களின் மக்களுக்கு சேவைகளை செய்யலாம்.
நாட்டிற்கு வெளியில் வாழும் மக்கள் அவர்களின் அரசியல் தேவைகளுக்கு அமைய செயற்பட சந்தர்ப்பம் உள்ளது. எனினும் குறுகிய நோக்கத்தில் அதனை பார்த்து இல்லாத பயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
முட்டாள், சுயநல அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அச்சத்துடன் வாழும் மனநிலையை மக்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. அப்படியான நிலைமைக்கு செல்ல வேண்டாம் என மக்களிடம் கௌரவமான முறையில் கோரிக்கை விடுக்கின்றேன்.
இலங்கை போர் நடைபெற்ற விதம் குறித்து எந்த தரப்புக்காவது சந்தேகம் இருக்குமாயின் அது சம்பந்தமாக உரிய விசாரணைகளை நடத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும். முன்னைய அரசாங்கம் எந்த தரப்பினருக்கும் அப்படியான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை.
இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து உள்நாட்டு விசாரணையை நடத்த தற்போது பொருத்தமான காலம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் அப்படியான விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சரத் பொன்சேகா வாக்களிக்கலாம்: மகிந்த
» பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா
» பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்
» பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா
» பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum