Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திட்டமிட்ட இன அழிப்பு! வடமாகாணசபை தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது!

Go down

திட்டமிட்ட இன அழிப்பு! வடமாகாணசபை தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது! Empty திட்டமிட்ட இன அழிப்பு! வடமாகாணசபை தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது!

Post by oviya Thu Feb 12, 2015 1:25 pm

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றது திட்டமிட்ட இன அழிப்பு என்பதனை சுட்டிக் காட்டும் வகையில் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது. என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு வரவேற்பினை தெரிவித்துள்ளதுடன், வட மாகாணசபைக்கு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

குறித்த தீர்மா னம் நிறைவேற்றப்பட்டதுடன் நின்றுவிடாமல் இந்த தீர்;மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். என நாம் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுகின்றோம். குறிப்பாக இந்தியா மற்றும் மேற்கு நாடுகள் இந்த விடயத்தில் கரிசனை காட்டவேண்டும்.

நாம் குறிப்பிடுவது இன அழிப்பு என்பது தமிழ் மக்ளைகை் கொன்று குவித்ததற்கும் அப்பால் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணில் வாழ முடியாத நிலையினை தோற்றுவித்ததுமாகும். அதனை முன்னைய அரசாங்கம் மட்டுமல்லாமல் தற்போதைய அரசாங்கமும் செய்கின்றது.

மேலும் குறித்த தீர்மானத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஐ.நாவரையில் கொண்டு சென்று அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இதேபோன்று இந்தியா மற்றும் மேற்கு நாடுகளும் தங்களுடைய நலன்களுக்கு அப்பால் தமிழர்களுடைய நலன்களையும், கருத்தில் எடுத்துச் செயற்படவேண்டும்.

தமிழர்களும், தமிழர்களுடைய பிரச்சினைகளும் மைதானத்தில் உதைக்கப்படும் பந்து அல்ல. என்பதனை சர்வதேசம் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டும். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று உண்டாகியிருந்தாலும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

நாங்கள் நீண்டகாலம் உரிமைகளுக்காக போராடிய இனம். இந்த மண்ணில் தனித்துவமான கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றைக் கொண்ட தனித்துவமான பூர்வீக குடிகள் நாங்கள். என்பதனை கருத்தில் கொண்டு ஐ.நா அறிக்கையினை சர்வதேசம் குறித்த காலத்திலேயே வெளியிடவேண்டும்.

படையினரின் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக.

அண்மையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கையின் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில் முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

படையினரை வெளியேற்றிவிட்டு நாங்கள் கடலிலும், ஆகாயத்திலுமா படைமுகாம்களை அமைப்பது என அவர் அருள்வாக்கு கூறிவிட்டுச் சென்றிருக்கின்றார். கடலிலும், ஆகாயத்திலும் படைமுகாம் அமைக்க முடியாது. என்பது எமக்கு தெரிந்த விடயம்.

ஆனால் பாதுகாப்பு தேவைக்கென மக்களுடைய நிலங்களை வைத்துக் கொண்டு வலி,வடக்கில் 18 உல்லாச விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளமை பாதுகாப்புக்கா அல்லது படையினரின் சுகபோகத்திற்கா என அவரைப் பார்த்து நாங்கள் கேள்வி எழுப்ப விரும்புகின்றோம்.

இதற்கு மேலதிகமாக கால்நடை வளர்ப்பதற்கான பண்ணைகள், தோட்டங்கள், ஹோல்ப் விளையாட்டு மைதானம், ஜனாதிபதிக்கான மாளிகை, கிளிசரியா மரம் வளர்த்து மின் உற்பத்தி செய்யும் நிலையம் ஆகியன எதற்காக என அவரைப் பார்த்து நாங்கள் கேட்க விரும்புகின்றோம்.

இவற்றினை விட 2கோடி மக்கள் தொகை கொண்ட தென்னிலங்கையில் வெறும் 30 ஆயிரம் படையினர் மட்டுமே உள்ள நிலையில் வெறும் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட வடமாகாணத்தில் ஒன்றரை லட்சம் படையினர் எதற்காக? இது முற்று முழுதாக வடக்கை இராணுவ கட்டுப்பாட்டுக்குள், வைத்திருக்கும் முயற்சி மட்டுமேயாகும்.

எனவே இராஜாங்க அமைச்சரின் கருத்துக்களை நாங்கள் கண்டிகின்றோம். நாங்கள் எங்கள் மக்களை மீள்குடியேற்றுங்கள் எனக் கோரிக் கொண்டிருக்கையில் அவருடைய கருத்துக்கள் நியாயமற்றவை யாக காணப்படுகின்றன என்றார்.

நெல்சிப் திட்டம் தொடர்பாக.

உலகவங்கியின் நிதியுதவியுடன் உள்ளுராட்சி மன்றங்களை வளப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றன ஆனால் அவை குறித்து வடமாகாணசபை எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்காமை வருத்தத்திற்குரியதாகும்.

மேலும் தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் உருவான பின்னர் ஊழல் மோசடிக ளுடன் தொடர்புடைய நபர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இங்கே ஊழல் மோசடி பேர்வழிகள் சுதந்திரமாக தங்கள் பதவிகளில் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் நாம் குறித்த நெல்சிப் திட்டத்தின் ஊழல் குறித்து உலகவங்கிக்கு தெரிவித்ததையடுத்து உலகவங்கியிலிருந்து எனக்கு பதில் கிடைத்துள்ளது. அதில் மேலதிகமாக எங்களிடமிருந்து ஆவணங்களை அவர்கள் கோரியிருக்கின்றார்கள். அதனை நாம் வழங்கியிருக்கின்றோம்.

அதேபோன்று வடமாகாண பொலிஸ் அதிகாரிக்கும் தெரியப்படுத்தப்பட்டமையினையடுத்து அவர்களும் குறித்த விடயத்தை புலனாய்வு பொலிஸாருக்கு பாரப்படுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கின்றார். ஆனால் இது குறித்து வடமாகாணசபை எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல், மத்திய அரசாங்கத்தின் மீது பொறுப்பை போட்டுவிட்டு அவர்கள் இருந்து விட்டார்கள்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் துறையின் கீழ் உள்ள சகல ஊழல் மோசடிகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மட்டக்களப்பில் மாபெரும் மே தினக் கூட்டம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு
» இலங்கையின் எதிர்கால அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும்!- செல்வம் எம்.பி.
» தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது! எனது பின் வாசலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரத்தான் வேண்டும். மஹிந்த

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum