Top posting users this month
No user |
Similar topics
கிழக்கு மாகாண சபையில் இன்று பெரும் அமளி துமளி! வரவு செலவுத்திட்டம ஏகமனதாக நிறைவேற்றம்
Page 1 of 1

கிழக்கு மாகாண சபை அமர்வு சபையின் தவிசாளர் ஆரியபதி கலபதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த அமர்வின்போது புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் மாகாண சபையின் நான்கு அமைச்சுக்களினதும் அத்துடன் முதலமைச்சின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, அனைத்து கட்சிகளின் குழுத் தலைவர்களுக்கு சபையில் உரையாற்ற சுமார் 5 நிமிடங்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டன.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி தனது உரையில்,
உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் 3 மில்லியனை 4 மில்லியனாக வழங்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை புதிய முதலமைச்சரிடம் முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய ஐக்கிய தேசியக் கட்சியின் குழுத் தலைவர் தயா கமகே,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும், கட்சியையும் பற்றி பேசும்போது, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், தவம், லாஹீர், மன்சூர், அன்வர் ஆகியோர்களுடன் முதலமைச்சரும் இணைந்து அவரின் உரைக்கு கண்டனம் வெளியிட்டனர்.
இதன்போது சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இதனையடுத்து சபையின் நடவடிக்கைகள் யாவும் தவிசாளரினால் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்போது இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
இதன் பிரகாரம் இவ்வரவு செலவுத் திட்டத்திற்கு ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பனவும் ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய முதலைமைச்சர் நஜீப் அப்துல் மஜீதினால் சமர்ப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஜனவரி மாதம் இரண்டு தடவைகள் சபை ஒத்திவைக்கப்பட்டதால் அவ்வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம்
» கிழக்கு மாகாண சபையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது!
» நல்லாட்சியிலும் கிழக்கு மாகாண சபையில் தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum