Top posting users this month
No user |
Similar topics
அய்யோ...தமிழக அரசே...என்னை விட்டு போயிட்டியே! பாடை கட்டிய சட்டக்கல்லூரி மாணவர்கள்
Page 1 of 1

சென்னையில் கல்லூரி இடம் மாற்றத்தை எதிர்த்து 6-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி கடந்த 3ம் திகதி முதல் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 4-ந் திகதி சென்னை பாரிமுனையில் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால் அன்றைய தினமே உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டதாகவும், தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் மாணவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டக்கல்லூரி மாற்றப்படக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் மொட்டை அடித்தனர்.
பின்னர் மாணவர் ஒருவரை பிணமாக படுக்கவைத்து பாடை கட்டினர். அவரின் மேல் ‘தமிழக அரசுக்கு கண்ணீர் அஞ்சலி’ என்று பலகை வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவிகள் தலைவிரி கோலமாய் சுற்றிலும் அமர்ந்து ‘அய்யோ! தமிழக அரசே! என்னை விட்டு போயிட்டியே!’ என்று ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் கதறி அழுதபடியே பாடையை ஏந்திச்சென்றனர்.
இந்த போராட்டம் குறித்து சட்டக்கல்லூரி மாணவர்களின் பிரதிநிதி எஸ்.காசிராஜன் கூறியதாவது, எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.
இன்று தமிழக கவர்னரிடம், எங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கொடுக்க உள்ளோம் என்றும் போராட்டத்தின் உச்சகட்டமாக எங்களின் அடையாள அட்டையை எரிப்பதாக முடிவு செய்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம்!- செந்தமிழன் சீமான் கண்டனம்
» பொலன்னறுவையை விட்டு என்னை விரட்ட முடியாது: வசந்த சேனநாயக்க
» மாணவர்கள் மீது வாள்வெட்டு: யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum