Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஃப்ளவர் கேக்

Go down

ஃப்ளவர் கேக்                     Empty ஃப்ளவர் கேக்

Post by oviya Sun Jul 26, 2015 3:34 pm




மைதா மாவு - கால் கிலோ
சீனி - 25 கிராம்
தேங்காய் எண்ணெய் - 25 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
டால்டா - 25 கிராம்
சீனி - 3 தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு லிட்டர்



மைதா மாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் சீனியை போட்டு கரைத்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்..


வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடுப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். அதைப் போல் டால்டாவையும் சூடுப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதாமாவைப் போட்டு அதில் சூடுப்படுத்திய தேங்காய் எண்ணெய் மற்றும் டால்டாவை ஊற்றி நன்கு கலந்துக் கொள்ளவும்.


அதன் பின்னர் அதில் கரைத்து வைத்திருக்கும் சீனி கலவையை ஊற்றி மிருதுவாகும் வரை பிசையவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.


பிசைந்த மாவிலிருந்து ஒரு சிறிய சாத்துக்குடி அளவு மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ளவும். மிகவும் மெல்லியதாக இல்லாமல் தேய்க்கவும்.


சப்பாத்தி கட்டையில் தேய்த்த மாவில் சிறிய வட்டமான மூடியைக் கொண்டு அழுத்தி நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.


வட்டமாக உள்ள துண்டுகளை எடுத்து ஏதேனும் இரண்டு பக்கத்தினை மட்டும் உள்நோக்கி மடக்கிக் கொள்ளவும்.


அதை அப்படியே மறுபுறம் திருப்பி மடக்காமல் இருக்கும் மற்ற இரண்டு முனைகளையும் மடக்கி நடுவில் ஒரு கிராம்பினை சொருகி வைக்கவும்.


இதைப் போல் மீதமிருக்கும் மாவிலும் கேக்கள் செய்து வைத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகின் பதம் அறிய ஒரு சொட்டு பாகினை தண்ணீரில் ஊற்றினால் அது கரையாமல் இருக்க வேண்டும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் செய்து வைத்திருக்கும் கேக்கை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.


பொரித்து எடுத்த கேக்கை செய்து வைத்திருக்கும் சீனி பாகில் போட்டு ஊறியதும் 10 நிமிடம் கழித்து எடுக்கவும்.


சுவையான ஃப்ளவர் கேக் தயார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum