Top posting users this month
No user |
Similar topics
மூங் ஃபிங்கர்ஸ்
Page 1 of 1
மூங் ஃபிங்கர்ஸ்
பாசிப்பருப்பு - ஒரு கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை
உப்பு
எண்ணெய் - தேவைக்கு
சீரகம் - 2 தேக்கரண்டி
பருப்பை 3 மணி நேரம் வரை ஊற வைத்து இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து இட்லி மாவு பதத்தில் நைசாக அரைத்து வைக்கவும்.
நாண்-ஸ்டிக் பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து அடுப்பில் இருந்து எடுத்து இறக்கி ஆற விடவும். (சூடான எண்ணெயில் மாவை ஊறினால் கெட்டியாகிவிடும்).
மாவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, உப்பு கலந்து வைக்கவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி தயாராக வைக்கவும்.
கலந்த மாவை எண்ணெய் ஆறியதும் அதில் ஊற்றி சீரகத்தோடு கலந்த பின் அடுப்பில் வைத்து சிறுந்தீயில் கிளறவும். மாவு திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
அப்போது எடுத்து எண்ணெய் தேய்த்த தட்டில் கொட்டி பரப்பி 4 - 5 மணி நேரம் வரை ஆற விடவும். பின் துண்டுகளாக்கவும். ஃபிங்கர் சிப்ஸ் போலவோ அல்லது சதுரங்களாகவோ போட்டுக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும். கெட்சப், இனிப்பு சட்னி, கார சட்னி வகைகளோடு பொருத்தமாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum