Top posting users this month
No user |
டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்? ஓய்ந்தது பிரசாரம்…10ம் திகதி விடை தெரியும்
Page 1 of 1

டெல்லி சட்டசபைக்கு நாளை தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியுள்ளது.
70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல், நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆம் ஆத்மியின் தலைவரும் முதல்–மந்திரி வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும், பாரதீய ஜனதா முதல்–மந்திரி வேட்பாளர் கிரண்பேடி கிருஷ்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சி முதல்–மந்திரி வேட்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும்கூட முன்னிறுத்தப்பட்டுள்ள அஜய் மக்கான், சாதர் பஜார் தொகுதியில் நிற்கிறார்.
ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா, காங்கிரஸ் என 3 கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களை வசீகரித்து ஓட்டுகளை அள்ளுகிற விதத்தில் வாக்குறுதிகளை வாரி வழங்கி உள்ளன.
கடந்த 15 நாட்களாக நடந்து வந்த தீவிர பிரசாரத்தில் அனல் பறந்தது. பாரதீய ஜனதாவுக்காக பிரதமர் நரேந்திர மோடியும், கட்சித்தலைவர் அமித் ஷாவும் தீவிர பிரசாரம் செய்தனர்.
அந்தக் கட்சியின் முன்னணி தலைவர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், உமா பாரதி, வெங்கையா நாயுடு மற்றும் 120 எம்.பி.க்கள் களமிறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரம், முழுக்க முழுக்க அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சார்ந்துதான் இருந்தது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் களமிறங்கி பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில், அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
பலத்த பாதுகாப்புடன் நாளை(7ம் திகதி) காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது, மாலை 6 மணிக்கு முடிகிறது, பதிவாகிற ஓட்டுகள் 10–ந்திகதி எண்ணப்படுகின்றன.
அன்று மதியமே டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum