Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மாவட்ட அரச அதிபர்களை இடமாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானம்

Go down

மாவட்ட அரச அதிபர்களை இடமாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானம் Empty மாவட்ட அரச அதிபர்களை இடமாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானம்

Post by oviya Fri Feb 06, 2015 1:23 pm

மாவட்ட அரசாங்க அதிபர்களை இடமாற்றம் செய்ய புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதிகாரிகளின் நியமனங்கள் சிலவற்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொள்கை திட்டமிடல், பொருளாதாரம், சிறுவர் விவகாரம் மற்றும் கலாசார அமைச்சின் ஆலோசகராக ஆர். பாஸ்கரலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர். பாஸ்கரலிங்கம், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய சிரேஷ்ட நிர்வாக அரச அதிகாரி என்பதுடன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சியின் போது நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

உலக வங்கி உட்பட சர்வதேச வங்கிகளில் ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அத்துடன் 2002 ஆம் முதல் 2004 ஆம் ஆண்டு வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

அதேவேளை தபால் மா அதிபர் பதவிக்கு இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான டி.எல்.பி. ஆர்.அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் பிரதான அதிகாரியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபராக பத்மா குலசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதனிடையே சகல மாவட்ட செயலாளர்களையும் இடமாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum