Top posting users this month
No user |
Similar topics
மத்திய அரசுக்கு கூட்டமைப்பு வழங்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்யவும்! இரா.துரைரட்ணம் கோரிக்கை!
Page 1 of 1

மத்திய அரசுக்கு எமது த.தே.கூட்டமைப்பு வழங்கி வருகின்ற ஆதரவை மறுபரீசீலனை செய்யவேண்டும். இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் த.தே.கூட்டமைப்பு மூத்த உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஊடக அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்களது ஏகோபித்த வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன கிழக்கு வாழ் தமிழ்மக்களது அபிலாசைகளுக்கு முரணாக இருப்பதுபோல் தெரிகிறது. உள்ளூர் சூழ்ச்சி ஒன்று இடம்பெறுவதாக அஞ்சுகின்றோம். மேலுமொருமுறை ஏமாந்துவிடக்கூடாது என்பதில் நாம் மிகக்கவனமாயிருக்கின்றோம்.
எனவே மத்திய அரசுக்கு எமது த.தே.கூட்டமைப்பு வழங்கி வருகின்ற ஆதரவை மறுபரீசீலனை செய்யவேண்டும். இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் த.தே.கூட்டமைப்பு மூத்த உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஊடக அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது கோரிக்கையில் மேலும் தெரியவருவதாவது:
கிழக்கில் கூட்டாட்சிதான் அமைய முடியும். தனித்து எந்த இனமும் ஆட்சியமைக்க முடியாது. கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உறுப்பினர்களது கருத்துக்களுக்கும் மக்களது அபிலாசைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அதனூடாக ஏனைய சமுகத்தினது ஆதரவையும் பெற்று பலத்தை நிருபித்து முதலமைச்சருடன் உறுதியான ஆட்சியமைக்க வேண்டும்..
மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளியாது தலைமைகள் செயற்பட முற்படுமாயின் மக்கள் வீதியிலிறங்க வேண்டி நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர். எதிர்வரும் பொதுத்தேர்தல் பற்றியும் இத்தலைமைகள் சிந்திக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆட்சியமைப்பு விடயத்தில் இழுபறிநிலை இன்னும் தொடர்கிறது. அதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களை நட்டாற்றில் விடமுடியாது. எனின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகள் மாற்று பொறிமுறையை முன்வைக்க வேண்டும். சிந்திக்க வேண்டும்.
மாற்றத்திற்காக மைத்திரிபாலவிற்கு வாக்களித்த தமிழ் மக்களை நாம் ஏமாற்ற முடியாது. கிழக்கு நிலவரம் எமக்குத்தான் தெரியும். மக்களில்லாமல் அரசியல் இல்லை. மக்களுக்காகத்தான் அனைத்தும். அவர்களது அபிலாசைகளை புறந்தள்ளிவிட்டு அரசியல் நடாத்த முடியாது. வரலாறு பூராக தவறுகளையே செய்து வரலாறே தவறாகிவிடக்கூடாது.
இனியும் அதனைத் தொடர அனுமதிக்க முடியாது.கிழக்கில் 40 வீத தமிழர்களும் 37வீத முஸ்லிம்களும் 23வீத சிங்களவரும் உள்ள நிலையில் தமிழ்த் தரப்பினருக்கு முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியதிகாரத்தை பெறுவதில் தார்மீக உரிமையுள்ளது. அதனை கிழக்கின் மற்றுமொரு சிறுபான்மைச் சமுகத்துடன் இணைந்தாவது பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமுள்ளது.
அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காவிடின் அடுத்த தேர்தலில் அதேமக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவாறு மாற்றத்திற்காக வாக்களிக்க நேரிடும் என்பதையும் வேதனையுடன் தெரிவிக்கின்றோம்.
எனவே கிழக்கு தமிழ் மக்களது உணர்வுகளை உதாசீனம் செய்து அலட்சிய மனப்பாங்கோடு செயற்படும் மத்திய அரசுக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கின் ஆட்சியாளர்களாக த.தே.கூட்டமைப்பு மாறவேண்டும்: துரைரட்ணம்
» கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கை
» விருப்புவாக்கு அடிப்படையில் அடுத்துள்ளோரை தெரிவு செய்யவும்: கபே அமைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum