Top posting users this month
No user |
சிறீதரன் எம்பியின் ஆதரவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் கௌரவிப்பு!
Page 1 of 1

பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஆதரவுடன் கடந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தை சேர்ந்த மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
கிளிநொச்சி அம்பாள்குளம் சத்தி சனசமுக நிலையத்தின் ஏற்பாட்டில் அம்பாள்குளம் பொது நோக்கு மண்டபத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
சக்தி சனசமூக நிலைய தலைவர் சுதன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பா.உறுப்பினர் சி.சிறீதரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான பாலாசிங்கசேதுபதி, தவபாலன், சுகந்தன், குமாரசிங்கம் மற்றும் அம்பாள்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஆசிரியர் சேதுபதி, கிராம அபிருத்தி சங்க உறுப்பினர்கள், சக்தி சனசமூக நிலைய செயலாளர், உறுப்பினர்கள், அம்பாள்குளம் மாதர் சங்க தலைவி, உறுப்பினர்கள்,
முன்பள்ளி ஆசிரியர்கள், சமாதான நீதவான் அமிர்தலிங்கம், கமக்கார அமைப்பு தலைவர் பாஸ்கரன், கிருஸ்ணபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் யோசவ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்தின் உபதலைவரும் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளருமான பொன்.காந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் தலைவர் பிரபாமணி, வலயக்கல்விப் பணிமனையின் அதிகாரி சிறீஸ்குமார், மலையாளபுரம் திருவள்ளுவர் வித்தியாலய அதிபர்,அபிவிருத்தி உத்தியோகத்தர், கலைவாணி உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதுடன் சக்தி சனசமூக நிலையத்திற்கு ஒரு தளபாடங்களும் பா.உறுப்பினர் சி.சிறிதரனால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் சக்தி சனசமுக நிலையத்தினர் வேண்டிக் கொண்டதற்கு இணங்க அங்கு வந்திருந்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான தவபாலன, சுகந்தன், பாலாசிங்கசேதுபதி ஆகியோர் தங்கள் நிதி ஒதுக்கீட்டில் சக்தி சனசமூக நிலையத்திற்கான நிரந்தர கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு நிதி ஒதுக்குவதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த நிகழ்விற்கு இந்த கிராமத்தை சேர்ந்த கலைமகள் அழகு வாணிபத்தினரும் தங்கள் அன்பளிப்புக்களை மாணவர்களுக்கு வழங்கியிருந்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum