Top posting users this month
No user |
Similar topics
தைரியம் இருக்கா? பா.ஜ.க.வுக்கு கேஜ்ரிவாலின் சவால்
Page 1 of 1

ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை பெற்ற விவகாரத்தில் தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று பா.ஜ.க.விற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு வரும் 7ம் திகதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு வந்த ரூ. 2 கோடி நிதி குறித்து சர்ச்சையைக் கிளம்பியுள்ளது.
இந்த பிரச்சனையை ஆம் ஆத்மியிலிருந்து பிரிந்து தனி அமைப்பாக இயங்கி வரும் ஆம் ஆத்மி தொண்டர்கள் படை இயக்கம் (அவாம்) என்ற அமைப்புதான் தற்போது எழுப்பியுள்ளது.
இந்த நன்கொடையில் முறைகேடு இருப்பதாகவும், இந்த பணம் ஹவாலா என்றும் மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து குற்றம்சாட்டினர்.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியும் கையும் களவுமாக ஆம் ஆத்மி கட்சி சிக்கிக் கொண்டது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசுகையில், மத்தியில் பா.ஜ.க அரசுதானே இருக்கிறது. அனைத்து பொலிஸ
மற்றும் விசாரணை அமைப்புகளும், சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு, உள்வுத் துறை, வருமான வரித்துறை அனைத்தும் உங்களிடம்தானே இருக்கிறது.
உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னை ஏன் கைது செய்யவில்லை? என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதால் உங்களுக்கு நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லை.
லோக்சபா தேர்தலின் போதும் கூட இதேபோல விஷம பிரசாரம் நடந்தது. கிரண்பேடியைப் பார்த்து கேட்கிறேன், என் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து நான் நேர்மையற்றவன் என்று முடிந்தால் சொல்லுங்கள் என்று பேசியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனதில் தில் இருக்கா? சைலண்ட் வேலிக்கு செல்லுங்கள்
» என்னை பலாத்காரம் செய்ய துணிச்சல் இருக்கா? கேள்வியால் அதிர வைத்த ரோஜா
» வாழ்க்கை ஒரு சவால்-சந்தியுங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum