Top posting users this month
No user |
Similar topics
1972ம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திர தின விழாவில் தமிழ்த் தலைமை
Page 1 of 1

இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார்.
1972 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழர்களின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்குபற்றவில்லை.
இந்த நிலையில் 43 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை சிறி ஜெயவர்த்தனபுர, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் பங்கேற்றார். ஏற்கனவே இன்றைய நிகழ்வில் சுமந்திரனும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை.
இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.
அதில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ்மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எனவே சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் எவரும் பங்குபற்றுவதில்லை என்றும், அந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாகக் கடைப்பிடிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது இரா. சம்பந்தனும் முக்கிய புள்ளியாக இருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மேற்குலக ஆலோசனையை மதித்தே சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்
» கண்ணதாசன் தலைமை திருக்குறள் கவியரங்கம்
» கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர்விருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum