Top posting users this month
No user |
வவுனியா நோக்கிச் சென்ற ரயில் மோதி நால்வர் பலி
Page 1 of 1

மாத்தறையில் இருந்து வவுனியாவுக்கு சென்ற “ரஜரட்ட ரெஜின” புகையிரதத்தில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதால் அதில் பயணித்த நான்கு பேர் பலியாகியதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் ராகம பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. புகையிரதம் பயணித்துக்கொண்ருக்கையில் குறித்த வாகனம் கடவையை கடக்க முற்பட்டபோதே அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, பிரதான புகையிரத பாதையினூடான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்தோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் இராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை
வீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நுகேகொட பஸ் உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதிலும் கிட்டத்தட்ட 10 இலட்சம் எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள்கள் காணப்படுகின்றன. முச்சக்கர வண்டிகளும் அவ்வாறே.
பெற்றோலின் விலை குறைக்கப்பட்டதையடுத்து வீதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் வெகுவாக காணப்பட்டு வருகின்றன.
முச்சக்கர வண்டிகளுக்கு பெற்றோல் லீட்டர் ஒன்றிற்கு 25 கிலோ மீட்டர் வரை பயணம் செல்ல முடிந்த போதிலும் பஸ் வண்டிகளுக்கு ஒரு லீட்டர் டீசலில் 3 கிலோ மீட்டர் மாத்திரமே பயணம் மேற்கொள்ள முடியும்.
வீதி நெரிசல் காரணமாக 2 கிலோ மீட்டர் மாத்திரமே வாகனத்தை செலுத்த முடியும். இதனால் பஸ் தொழில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது எனவும் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum