Top posting users this month
No user |
முன்னாள் வர்த்தக அமைச்சர் செய்த அட்டூழியம்
Page 1 of 1

முன்னாள் வர்த்தக அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மதுவரித் திணைக்களத்திற்கு 800 மில்லியன் ரூபாய் வரி செலுத்தாமல் இருந்த தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது.
ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தனது சொந்த மது உற்பத்தி நிலையமான வயம்பே வடிகால் மது உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மதுவிற்கான வரியையே செலுத்தாமல் இருந்துள்ளார்.
மதுவரித் திணைக்களத்தின் ஊடாக செலுத்தாவிட்டால் உடனடியாக அந்த மது உற்பத்தி தொழிற்சாலை மூடப்படல் வேண்டும் என்பது சட்டம். ஆனால் இச்சட்டத்தை மீறி அமைச்சர் தனது பதவியை துஸ்பிரயோகம் செய்து 7 மாதங்கள் வரி செலுத்தாமல் மது உற்பத்தி செய்து வந்திருக்கின்றார்.
அதேவேளை இவர் உற்பத்தி செய்த மதுபானங்கள் சதொச, கார்கில்ஸ் உள்ளிட்ட முக்கிய விற்பனை மையங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது சட்டத்திற்கு முரணான செயலாகும். இவரின் தொழிற்சாலையின் உற்பத்தியே தெமட்டகொடயில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 68 ஆயிரம் சாராய போத்தல் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எட்டு கோடி ரூபாவுக்கும் மேல் வரி பாக்கி வைத்த முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வயம்ப மதுபான உற்பத்தி நிறுவனம் மதுவரி திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 8 கோடி ரூபாவுக்கும் மேலான வரி பணத்தை செலுத்தவில்லை என திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுவரி திணைக்களத்தின் சட்டத்திற்கு அமைய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி பணத்தை செலுத்த தவறினால், மது உற்பத்தி தொழிற்சாலையை மூடுமாறு திணைக்களம் உத்தரவிட முடியும்.
எனினும் இந்த சட்டம் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அமுல்படுத்தப்படவில்லை என்பது கடந்த காலங்களில் அவர் நடந்து கொண்ட விதத்தில் தெளிவாக அறிய முடிந்தது.
மதுவரி திணைக்களத்திற்கு 7 மாதங்களாக செலுத்த வேண்டிய வரி பணத்தை முன்னாள் அமைச்சரின் நிறுவனம் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
அதேவேளை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மது உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சாராயம், சதொச மற்றும் காகில்ஸ் வர்த்தக நிலையங்கள் ஊடாக சட்டவிரோதமான முறையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியகிடைத்துள்ளது.
கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள களஞ்சியம் ஒன்றில் இருந்து அண்மையில் 68 ஆயிரம் மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன் அது தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் மேற்படி தகவல்கள் தெரியவந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum