Top posting users this month
No user |
Similar topics
கிளிநொச்சி சிவபுரம் ஏழைக் கிராமப் பள்ளியின் ஏக்க நிலை!
Page 1 of 1

கிளிநொச்சி பரந்தன் சிறுநகரத்தின் மிக அருகில் உள்ள கிராமம். அமைச்சர்களும் பா.உறுப்பினர்களும் தென்னிலங்கை உல்லாசப் பயணிகளும் பயணம் செய்யும் ஏ9 வீதிக்கு அருகாக ஓட்டையும் ஒடிசலுமான வாழ்க்கையோடு மாரடிக்கும் ஓர் ஏழைக் கிராமமே சிவபுரம்.
மழை காலங்கள் வரும்போது இந்தக்கிராமத்திற்கு செல்வதற்கு படகு வேண்டும் என்னும் நிலையில்தான் என்றும் இவர்களின் வாழ்க்கை.
சுமார் 316 காணிகள் உள்ள இந்தக்கிராமத்தில் 298 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அநேகமாக அனைவரும் போரால் பாதிக்கப்பட்டவர்கள்.
வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்கள் கணிசமானவர்கள். இளவயது திருமணங்களும் உண்டு. மாற்றுவலுவுள்ளோர்கள் இருக்கின்றார்கள்.
2006ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கிராமத்தின் மக்களின் காணிகளுக்கு காணி உறுதி இல்லை. இதன் காரணமாக நிரந்தர வீட்டுத்திட்டம் இல்லை.
காணிகளை இராணுவத்துக்கு கையளிப்பதில் முன்னிற்கும் கண்டாவளை பிரதேச செயலர் இதில் பெருமளவு அக்கறை எடுத்ததாக தெரியவில்லை.
இந்த கிராமத்தின் வீதிகள் மிகமோசமானவை. இந்த வீதிகள் பராமரிப்புக்கு பொறுப்பானவர்கள் கரைச்சி பிரதேச சபையா? யார் பொறுப்பு.வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மிகமோசமாக உள்ளன.
இந்த கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஒரு சிலர் இருப்பதாக தெரிகின்றது. ஏழைகளின் பிள்ளைகளான இவர்கள் எப்படி படிக்கின்றார்கள். அவர்களுக்காக கல்வி செலவு என்ன யாருக்கும் தெரியுமா?
இந்தக்கிராமத்தின் பிள்ளைகளின் நன்மை கருதி ஒரு பாடசாலை 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஓர் ஆரம்ப பாடசாலை.அதன் பெயர் கிளிநொச்சி சிவபுரம் ஆனையிறவு அ.த.க.பாடசாலை.
அதிபரும் ஆறு அசிரியர்களுடன் அது இயங்குகின்றது. ஆனால் அது வளங்கள் நிரந்தர கட்டடிம் இன்றி உருக்குலைந்து கிடக்கின்றது.
கற்றலுக்குரிய சூழல் அங்கு இல்லை. சில இடங்களில் கடந்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமும் அதன் அடிவருடிகளான ஈ.பி.டி.பியின் சந்திரகுமாரும் செய்த திட்டமிடல்களில் உருவாக்கப்பட்ட கட்டிடங்களில் வெளவால்கள் குடிகொண்டுள்ளன.
மாடுகள் நாய்களும் உறங்கி மகிழ்கின்றன. ஆனால் தேவைகள் உள்ள பல கிராமங்கள் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி சீரழிந்துள்ளன.
நேற்று யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனை அழைத்த இந்தக்கிராமத்து மக்கள், தங்கள் நிலைமைகளை பட்டியலிட்டுள்ளனர்.
இப்பொழுது அவர்கள் கேட்பது இந்த பாடசாலைக்கான நிரந்தர கட்டிடம். கற்றல் வசதிகள். அவர்கள் நிரந்தர கட்டிடத்தை உருவாக்குதவற்கு அதிகாரிகள் காணி உறுதி போன்றவற்றை காரணம் காட்டி புறக்கணித்து வருகின்றனர்.
எனவே காணி உறுதிகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து தருவதுடன் இந்த பாடசாலையை ஏனைய பாடசாலைகள் போல உருவாக்கி இந்த ஏழைப்பிள்ளைகளுக்கு கற்றலுக்குரிய கௌரவத்தை புலம் பெயர் மக்களும் இணைந்து ஏற்படுத்தி தருமாறு வேண்டி நிற்கின்றனர்.
சிவபுரம் மக்களின் அவர்களின் பிள்ளைகளின் உறுதியான அடிப்படைக்கல்வியை தீர்மானிக்கும் பரந்தன் சிவபுரம் ஆனையிறவு அ.த.க.பாடசாலையின் தலைவிதியை மாற்றுவோம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிளிநொச்சி சிவபுரம் ஏழைக் கிராமப் பள்ளியின் ஏக்க நிலை!
» கிளிநொச்சி எஸ்.கே.மூதாளர்கள் பேணகத்திற்கு வட மாகாண முதல்வர் விஜயம்
» ஜனாதிபதி நாளை கிளிநொச்சி விஜயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum