Top posting users this month
No user |
லசந்த கொலை தொடர்பான விசாரணைகளை சி.ஐ.டியிடம் ஒப்படையுங்கள்: ஊடகவியலாளர்கள் சங்கம்
Page 1 of 1

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளை உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை இதுவரை பயங்கரவாத விசாரணை பிரிவே மேற்கொண்டு வந்தது.
எனினும் இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து திருப்தியடைய முடியாது என சங்கத்தின் தலைவர் மந்தனா இஸ்மையில் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவம் குறித்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி முதல் விசாரணை நடத்தப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் சிறையில் இல்லை. கைது செய்யப்பட்ட இருவர் இறந்து போயினர். மற்றைய சந்தேக நபரான இராணுவ அதிகாரி ஒருவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான கோப்புகள் இன்னும் பயங்கரவாத விசாரணைப் பிரினரிடமே உள்ளது.
நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய அந்த கோப்புகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்து விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் மந்தனா இஸ்மையில் கூறியுள்ளார்.
குறித்த கொலையுடன் தொடர்புடைய சில இராணுவ அதிகாரிகள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் மந்தனா இஸ்மையில் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum