Top posting users this month
No user |
விஜயகாந்தின் வாழ்த்து!
Page 1 of 1
விஜயகாந்தின் வாழ்த்து!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடியரசு தின விழாவை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாட்டின் விடுதலைக்கு பிறகு, இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டு, மக்களாட்சி மலர்ந்ததை நினைவு கூறும் வகையில், 1950ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ஆம் நாளை "இந்திய தேசிய குடியரசு தினமாக" கொண்டாடி வருகிறோம்.
மக்கள் தேர்தல் மூலம் தாங்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வகையில், மக்களுக்காக மக்களால் அமைக்கப்பட்ட மக்கள் அரசு தான் குடியாட்சி எனப்படுகிறது.
ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை புரட்சிகள் மற்றும் போராட்டங்கள் மூலம் எதிர்த்து, சுதந்திர இந்தியாவை பெற்றோம். தாய்நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, ஒவ்வொரு மனிதனும் சுதந்திர காற்றை சுவாசிக்கப் பாடுபட்ட தியாகிகளையும், தேசத்தலைவர்களையும் இந்த நன்நாளில் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டிற்காக தன்னுயிரை கொடுத்த தியாகிகளைப் போற்ற வேண்டும்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ளது. அதில் ஜாதி, மதம், மொழி, இனம், என பல வேறுபாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்வோம்.
ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பேணிக்காத்திடுவோம் என சூளுரைத்து, தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum