Top posting users this month
No user |
Similar topics
அருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில்
Page 1 of 1

மூலவர் : ஆதி துலுக்காணத்தம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் :
ஊர் : கோடம்பாக்கம்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
ஆடிசெவ்வாய், ஆடிவெள்ளி, ஆடி அமாவாசை
தல சிறப்பு:
அம்மனின் சிரசு (தலை) ஓடையில் கண்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில் கோடம்பாக்கம் சென்னை.
பொது தகவல்:
இங்கு விநாயகர், பைரவர், ஐயப்பன் மற்றும் சப்த கன்னியர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன
பிரார்த்தனை
பிள்ளை பாக்கியம் கிடைக்க, மாங்கல்யம் நிலைக்க இந்த அம்மனை பிரார்த்திக்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு பொங்கல் வைத்தும், கூழ்வார்த்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இங்குள்ள அம்மன் கடும் உக்கிரத்துடன் சிரசு மட்டுமே கொண்ட ஆதி தலுக்காணத்தம்மன் ஆவாள். பின்னாளில், அம்மனின் முழுவிக்கிரகத் திருமேனியையும் கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கியுள்ளனர். விநாயகர், பைரவர், ஐயப்ப மற்றும் சப்த கன்னியர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சங்கடஹர சதுர்த்தி அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு பூஜை, ஐயப்ப பஜனை என எப்போதும் கோயிலில் விழாக்களும் விசேஷங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அம்மனின் சன்னதிக்கு வந்து நேர்ந்துகொள்ளும் பெண்கள் ஏராளம். ஆடி மாதத்தில் எல்லா நாட்களிலும் அம்மனைத் தரிசித்து, தங்களது பிரார்த்தனையை வைத்துச் செல்கின்றனர் பக்தர்கள்.
ஆடியின் மூன்றாவது வெள்ளிக்கிழமை விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாள் விழாவாக அடுத்தடுத்த நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் அம்மன் திருவீதியுலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். பிறகு படையல் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதனை உட்கொண்டால் பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள். ஆடி மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை, அம்மனுக்குக் கூழ் வார்த்தல் நடைபெறுகிறது. இங்கு தங்களது மனக்குறையைச் சொல்லி வழிபட்டால் போதும்.. வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் தந்தருள்வாள் துலுக்காணத்தம்மன் எனப் போற்றுகின்றனர் பெண்கள்.
தல வரலாறு:
இஸ்லாமியப் பெண்மணி தன் மகனுக்குப் பார்வை கிடைக்க வேண்டும் என அம்மனிடம் வேண்டிக்கொண்டாள். அவளின் பிரார்த்தனையை ஏற்ற அம்மன், அவளின் குழந்தைக்குப் பார்வை தந்து அருளினாள். அன்று முதல், அந்த அம்மனின் திருநாமம் ஆதி துலுக்காணத்தம்மன் என அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. சுமார் 100 வருடங்களுக்கு முன்பு, சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் ஓர் ஓடை இருந்ததாம். அந்த ஓடையில் இருந்து ஒருநாள் அம்மனின் சிரசு (தலை) மட்டும் கண்டெடுக்கப்பட்டு, அதைப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டதாம். ஆரம்பத்தில், அண்ணாசாமி என்பவரால் பனை ஓலைகளைக் கொண்டு கட்டப்பட்ட கோயில் அது! பிறகு, அம்மனின் சாந்நித்தியத்தை அறிந்து ஊர்க்காரர்கள் பலரும் திரண்டு வந்து வழிபடத் துவங்கினார்கள். அதன்பின் அனைவரின் முயற்சியாலும் இந்தக் கோயில் கட்டடமாக எழுப்பப்பட்டது என்கின்றனர் பக்தர்கள்!
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: அம்மனின் சிரசு (தலை) ஓடையில் கண்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பு.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
» அருள்மிகு விநாயகர் திருக்கோயில்
» அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு விநாயகர் திருக்கோயில்
» அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum