Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மூதூர் கடல்பயண மரணத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று

Go down

மூதூர் கடல்பயண மரணத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று Empty மூதூர் கடல்பயண மரணத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று

Post by oviya Sat Jan 24, 2015 2:23 pm

திருகோணமலை மாவட்டம் மூதூர் வரலாற்றில் என்றுமே நெஞ்சங்களை விட்டு அகலாத சோகமும், கண்ணீரும், அவலக் குரல்களும் எதிரொலித்த நாள்தான் 1993 ஜனவரி 25ஆம் திகதியாகும்.
25ஆம் திகதி அன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருகோணமலை ஜெட்டியிலிருந்து மூதூரை நோக்கி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 130 பயணிகளுடன் பயணித்த தனியார் இயந்திரப் படகு திருகோணமலைக்கு அண்மையில் உள்ள பாதாள மலையை நெருங்கியதும் சீறி எழுந்த பாரிய கடல் அலைகளால் மூர்க்கத்தனமாக மோதப்பட்டு கடலுடன் சங்கமமானது.

படகில் பயணம் செய்தவர்களில் 30 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டதுடன் 13 பேரின் சடலங்கள் மட்டுமே மக்களால் மீட்கப்பட்டது.

இக்கோரச் சம்பவம் நிகழ்ந்து 22 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் அந்தக் கொடூரச் சம்பவத்தை மூதூர் மக்களின் மனத் திரையில் இருந்து மறைக்க முடியாதுதான்.

அப்போதைய காலங்களில் திருமலையிலிருந்து மூதூருக்கு கடல் வழிப் பயணம் மேற்கொள்வதானால் கடல் வழியாகப் 12 கிலோ மீற்றர் தூரம்தான். ஆனால் அந்த தூரத்தை ஒன்றரை மணி நேரமாக இயந்திரப் படகுகளில் பயணிக்க வேண்டும்.

அதே நேரம் கிண்ணியா துறையடியில் இருந்து அந்த 12 கிலோ மீற்றர் தூரத்தை குறுக்கு வழிப்பயணமாக 45 நிமிடத்தில் அல்லது ஒரு மணி நேரத்தில் மூதூரை அடைந்து விடலாம்.  அப்போதைய காலங்களில் திருமலை - மூதூர் கடல்பயண சேவைக்கு இரண்டு இயந்திரப் படகுகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது.

ஒரு படகில் சுமார் 150 பிரயாணிகள் மாத்திரமே பிரயாணம் செய்ய முடியும். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும்தான் இரண்டு படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. நாளாந்தம் இப்படியாகத்தான் மூதூர் பயணச் சேவை இருந்து வந்தது. மாலை 5.00 மணிப் படகைத் தவறவிடும் அரசாங்க ஊழியர்களும் ஏனைய பொது மக்களும் திருமலையில அன்றைய இரவைக் கழிக்க வேண்டிய நிலையும் நாளாந்தம் ஏற்பட்டு வந்தது.

மூதூர் மக்களின் சகல தேவைகளும் திருமலையில் அமைந்துள்ளதால் நாளாந்தம் மூதூர் மக்கள் திருமலைக்குப் பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவையுள்ளது. அப்போதைய காலங்களில் மூதூர் தமிழ் மக்கள் மட்டுமல்லாது முஸ்லிம் மக்களும் இராணுவக் கெடுபிடிக்குள் சிக்கித் தவித்த வரலாறும் உள்ளது.

மூதூரில் அமைக்கப்பட்ட சில இராணுவ முகாம்களை அண்டியிருந்த பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினார்கள். சில குடும்பங்கள் பகலில் வீட்டில் வாழ்க்கை நடாத்துவதும், இரவில் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் வாழ்வதும் வழக்கமாக இருந்து வந்தது.

அப்போதைய காலங்களில் மூதூர் பகுதி மக்களின் பிரயாணம்தான் மிகவும் உச்சக் கட்டப் பிரச்சினையாக இருந்து வந்தது. அத்துடன் மூதூர் மக்கள் மிக நீண்ட காலங்களாக இராணுவத்தினரின் பொருளாதாரத் தடைக்குள் சிக்கித் தவித்து வந்தனர்.

மண்ணெண்ணெய், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மூதூருக்குள் கொண்டு செல்வது மட்டுப்படுத்தப்பட்டது, ஒருவர் ஒரு போத்தல் மண்ணெண்ணெய், ஒரு தீப்பெட்டி மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

ஆனால் இவைகள் எல்லாவற்றையும்விட அப்போது அதாவது மூதூர் என்ற ஊர் உருவான காலம் தொட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு திறப்பு விழா செய்யப்பட்ட கிண்ணியா மூதூரை இணைக்கும் தரைவழி கடல் பாலங்களான உப்பாறு, கெங்கை, இறால்குழி ஆகிய மூன்று கடல் பாலங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்ட கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையும் மூதூர் மண்ணிலும் வாழ்க்கை மிகவும் துன்பகரமானதாகவும், சோகமானதாகவும்தான் அமைந்தது.

கடந்த காலங்களில் மூதூர் மாணவர்கள,அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மூதூரில் இருந்து சேருவல ஊடாக கந்தளாய் தம்பலகமம் வழியாக திருமலையை அடைவதற்கு சுமார் 5 மணிநேரமெடுக்கும். மூதூர் திருமலைப் பணயம் என்பது ஒரு நாள் முழுவதும் பிரயாணம் செய்ய வேண்டிய மிகவும் துன்பகரமான நிலையே இருந்து வந்தது.

ஆனால் இன்று மூதூர் மக்கள் 15-20 நிமிடங்களில் திருமலையயை அடைகின்றார்கள். அதிகளவு நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து நாளாந்தம் தங்களது பிரயாணத்தில் யாருமே அனுபவிக்காத துன்பத்தை மூதூர் மக்கள் அனுபவித்துள்ளார்கள்.

இப்போது மூதூர் - கிண்ணியா ஊடாக திருகோணமலைக்கு நினைத்த நேரத்தில் பயணம் செய்ய முடிகின்றது. இப்போது முற்று முழுதாக மூதூர் மக்கள் கடல் வழிப் பிரயாணம் இல்லாமல் போய் விட்டது.

கிண்ணியா - மூதூரை இணைக்கும் உப்பாறு, கெங்கை, இறால்குழி ஆகிய பகுதி கடல் பாலங்கள் கட்டப்பட்டு மக்களின் தேவைக்காக திறந்து விடப்பட்டதும் அக்கரைப்பற்று, கல்முனை, மட்டக்களப்பு, வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, மூதூர் மக்களின் பிரயாணம் திருமலையுடன் மிகவும் இலகுவாக இணைக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் திருமலை அக்கரைப்பற்றுக்கான பஸ் சேவை வாகரை ஊடாக நாளாந்தம் பல டிப்போக்களால் நடாத்தப்பட்டு வருகின்றது. அரை மணிக்கு ஒரு பஸ் சேவை திருமலையில், கல்முனையில் இருந்து நடைபெற்று வருகின்றது.

மற்றும் ஏராளமான தனியார் பஸ்சேவைகளும் நடைபெற்று வருகின்றது. மூதூர் மக்களின் வாழ்கையில் சோகமும் துன்பங்களும் நிறைந்த இந்த நாளை மறக்க முடியாது. எம்எம்.நிலாம்டீன்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum