Top posting users this month
No user |
அரசியல் இலாபங்களுக்காக ஈழத் தமிழர் நல்வாழ்வை பலியாக்கக் கூடாது: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
Page 1 of 1

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு வந்து விட்டால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு மூடுவிழா காணப்படும் என்று அஞ்சுவதைப் போல் உள்ளதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் ஆட்சி அமைந்த பத்தே நாட்களில் எல்லாம் நடந்து விடுமென்று நாம் எதிர்பார்க்க வேண்டாம்.
அதே சமயத்தில் இலங்கை அரசின் முயற்சிகளை ரணில் விக்ரமசிங்கவின் தமிழர் ஆதரவு பேச்சை நாடகமென்று கொச்சைப்படுத்தவும் வேண்டாம்.
தமிழகத்தின் சில தலைவர்கள் பேசுவதைப் பார்த்தால், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு வந்து விட்டால் தங்கள் அரசியல் செயல்பாடுகள் மூடுவிழா காணும் என்று அஞ்சுவதைப் போல் உள்ளது.
புதிய இலங்கை அரசுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் சுமூகமான உறவு வந்துவிடக் கூடாது என்று விரும்புவது போலவும் உள்ளது.
சுய அரசியல் இலாபங்களுக்காக இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வை பலியாக்கக் கூடாது. நாம் தமிழகத்திலிருக்கிற இலங்கைத் தமிழ் அகதிகளை நல்ல முறையில் கவனித்துக் கொள்வோம். அகதி முகாம்களில் அவர்கள் சந்தோசமாக இல்லை என்பது வேதனை அளிக்கிறது.
வெகு சீக்கிரம் இலங்கையில் நல்ல சூழல் உருவாகி அகதிகள் அனைவரும் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
எங்கே இலங்கையில் நல்லது நடந்து விடுமோ என்ற ஆதங்கத்தில் இவ்வளவு சீக்கிரமாக இலங்கை அரசுக்கு எதிரான குரலை தமிழகத்தில் எழுப்பி நல்ல எண்ணமுள்ளவர்களைக் கூட கெட்டவர்கள் ஆக்க வேண்டாம்.
தமிழர்கள் அனைவரும் ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்ததால் பொறுப்பேற்றிருக்கின்ற புதிய அரசு அமைந்திருக்கிறது என்ற உணர்வு இலங்கை ஆட்சியாளர்களுக்கு உள்ளது. அதன் விளைவாகத்தான் தமிழர் ஆதரவு பேச்சுக்கள் கிளம்பியிருக்கிறது.
ராஜபக்ஷவுக்கு என்ன நடக்க வேண்டுமென்று நாம் ஆசைப்பட்டோமோ அது நடக்கிறது.
தமிழகத் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றும் நடக்காது என்று அவ நம்பிக்கையை விதைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். புதிய இலங்கை அரசு தமிழர்களை காப்பாற்றுவார்கள் என்றும் ராஜபக்ஷவுக்கு உரிய தண்டனையைத் தருவார்கள் என்றும் நம்புவோம் என அவர் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum